அரூரில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது

அரூர் டவுன் PWD குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. 
தர்மபுரி மாவட்டம் அரூர் ரவுண்டானாவில் இருந்து பேருந்து நிலையம் வரை சாலை விரிவாக பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றன. அப்போது சாலையோரத்தில் அமைந்திருந்த ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலை சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்டன. பக்த்தர்கள் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை வழிபட டவுன் பீ டபுள் யு டி குடியிருப்பு பகுதியில் கோவிலுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் பாஜக நகர் தலைவர் ஜெயக்குமார், துரை, தீர்த்து, சேட்டு, கோபி, உள்ளிட்ட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Comments