இந்தியாவில் பெண்கள் கல்வி அறிவில் முன்னேற வேண்டும் என நினைக்கும் ஒரே ஒரு முதல்வர் நமது தளபதிதான் அரூரில் பி. பழனியப்பன் பேச்சு
இந்தியாவில் பெண்கள் கல்வி அறிவில் முன்னேற வேண்டும் என நினைக்கும் ஒரே ஒரு முதல்வர் நமது தளபதிதான் பி. பழனியப்பன் பேச்சு
தருமபுரி மாவட்டத்தில் திமுக மருத்துவரணி சார்பில் அரூரில் சுமார் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி, 5 வகையான 2 கிலோ அளவில் காய்கறிகள், வழங்கும் நிகழ்ச்சி மருத்துவரணி செயலாளர் மருத்துவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு

தமிழகத்தில் உள்ள மாணவிகள் அதாவது அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் உயர்கல்விக்கு படிக்க வேண்டும் என்று சொன்னால் மாதம் 1000 ரூபாய் அவர்களுடைய வங்கிக்கணக்கில் போடப்படுகிறது. ஒரு சில பேர் பேசிவருகின்றனர் தாலிக்கு தங்கம் கொடுத்தார்கள் அதை நிறுத்திவிட்டார்கள் என்று ! திருமணம் ஆனபிறகு உடனடியாக தாலிக்கு தங்கம் கொடுப்பதில்லை ஆறு மாதம் கழித்தோ ஏழு மாதம் கழித்தோ கொடுக்குறாங்க ஆனாலும் அதில் பல தடைகள் இருக்கிறது. அதனால் ஒரு கல்வி அறிவு பெண் பெற்றால் எவரையும் எந்த ஆணையும் நம்பாமல் கூட வாழலாம் வாழ முடியும் என்பதற்காகத்தான் தமிழக முதல்வர் இந்த திட்டத்தை கொண்டு வந்து மாதம் 1000 ரூபாய் கொடுத்துள்ளார். இந்த திட்டம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடையாது. அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஏழை மாணவிகளுக்கு இந்த திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்திய தலைவர் இந்தியாவிலேயே ஒரே ஒரு முதல்வர் நம்முடைய தளபதிதான் என உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் முல்லை ரவி, வேடம்மாள், கீரை விஸ்வநாதன் , ராஜேந்திரன், கிருஷ்ணகுமார், மற்றும் திமுக பிரமுகர்கள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment