ஓடவும் முடியாது ! ஒழியவும் முடியாது ! திருடர்களுக்கு செக் வைத்து தூக்கிய தருமபுரி காவல்துறை பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம்






தர்மபுரியில் திருட்டில் ஈடுபட்டு,இருட்டில் மறையும் கொள்ளை கும்பல்....!

வலைவீசி பிடித்த போலீசார்...! பொதுமக்கள் பாராட்டு...!











தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் கடந்த 2 மாதங்களில் 5 க்கு மேற்பட்ட வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.இவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வயதானவர்கள் வீடு ,ஆள் இல்லாத வீடு போன்ற இடங்களை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையடித்து வந்தனர்.

இந்த சம்பவம் பொம்மிடிப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.இதை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் ஸ்டலில் தர்மபுரி மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் உத்தரவின் பேரில் அரூர் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் பொம்மிடி போலீசார் களத்தில் இறங்கினர். 

இந்த குழுவில் பொம்மிடி எஸ் ஐ சக்திவேல் உட்பட போலீஸ் டீம் துரிதமாக செயல்பட்டு திருட்டு கும்பலை வலை வீசி பிடித்துள்ளனர்.

இவர்கள் ஏற்காடு பகுதியை சார்ந்த 1.பெரியான் 37 வயது

2. கார்த்தி வயது 21

3. கோவிந்தராஜ் வயது 35 

4.மணி வயது 20

5. சக்திவேல் வயது 26 ஆகிய ஐந்து பேரை போலீசார் பிடித்துள்ளனர்.

 மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.இந்த 7 பேர் கொண்ட குழுவினர் பொம்மிடி  பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றி ஆளில்லாத வீடு, அரவணைப்பில்லாத பெற்றோர் ஆகியோரை பகல் நேரத்தில் கண்காணித்து, பொம்மிடி பகுதியில் அரசு மதுபான கடையில் சரக்கு அடித்து விட்டு, இரவு நேரத்தில் முகமூடி அணிந்து திருட்டில் ஈடுபட்டு இருட்டில் மறைந்துள்ளனர்.  இவர்களிடம் இருந்து பணம் ,நகை, பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

 இவர்களை ஆரம்ப நிலையிலேயே போலீசார் வலை வீசி பிடித்துள்ளதால், பெரும் கொள்ளையர்களாக மாறாமல் தடுக்கப்பட்டுள்ளனர். 2 மாத காலமாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த திருட்டு கும்பலை பிடித்த பொம்மிடி தர்மபுரி காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Comments