மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி அரூர் காவல் நிலையம் எதிரே நடைபெற்றது
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி அரூர் காவல் நிலையம் எதிரே நடைபெற்றது
தர்மபுரி மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் மற்றும் நற்சிந்தனை மாற்றுத்திறனாளி அமைப்பு இணைந்து சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் விளையாட்டு போட்டி பேச்சுப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சரவணன், கவிஞர் ரவீந்திர பாரதி, பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் தும்பாராவ், வட்டத் தலைவர் வேலு, சங்கர், ராமகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment