தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் வெள்ளம் கரும்பு உள்ளிட்ட பொருட்களை சேர்த்து வழங்க பாஜக விவசாய அணி சார்பில் தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் வெள்ளம் கரும்பு உள்ளிட்ட பொருட்களை சேர்த்து வழங்க பாஜக விவசாய அணி சார்பில் தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு வருடம் தோறும் நியாய விலை கடைகளில் அரிசி சர்க்கரை வெள்ளம் முந்திரி ஏலக்காய் பாசிப்பருப்பு கரும்பு உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களை வருடா வருடம் வழங்கி வந்தது. தற்போது தமிழக அரசு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் சேர்த்து தொகுப்பாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது இதனை கண்டித்து பாஜக விவசாய அணி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தது அதனை அடுத்து இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர் வெற்றிவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி சர்க்கரை இத்துடன் ஆயிரம் ரூபாய் பணம் மட்டும் வழங்குவதாக அறிவித்துள்ளதை கண்டித்து வெள்ளம் கரும்பு தேங்காய் உள்ளிட்டவைகளை சேர்த்து பொங்கல் தொகுப்பாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருபுறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மறுபுறம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் ஆண்கள் தாங்கள் கொண்டு வந்த கரும்பை போட்டி போட்டுக் கொண்டு உடைத்து எடுத்துச் சென்றனர்
Comments
Post a Comment