மேல்மருவத்தூர் சென்று வந்த சைலோ கார் ஒன்று அரூர் அருகே நடுக்காட்டில் தீப்பற்றி எரிந்து கருகின - காரல் பயனம் செய்த 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.
சேலம் மாவட்டம் களரம்பட்டியை சேர்ந்த குணா என்பவருடைய சைலோ காரில் ரமணா குடும்பத்தினர் 6 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு இன்று அதிகாலை வீடு திரும்பினர். அப்பொழுது அரூர் அருகே கார் சென்றுக்கொண்டிருந்தபோது பொய்யப்பட்டி காட்டில் திடீரென இன்ஜினில் இருந்து புகை வந்ததால் பதறிப்போன ஓட்டுநர், உடனடியாக காரை நிறுத்தினார். தீப்பற்றி எரிய ஆரம்பித்ததால் உள்ளே இருந்த ஆறு பேரை அவசர அவசரமாக கீழே இறக்கிவிட்டு உள்ளே வைத்திருந்த தண்ணீர் கேன் மூலம் அணைக்க முற்பட்டனர். அதற்குள் தீ மலமலைவென பற்றி எரிந்தது. பின்பு அரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வருவதற்குள் கார் முழுவதும் எரிந்து கருகின.
இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் குணா அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment