தருமபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் A. பாஸ்கர் Ex MLA முன்னிலையில் தருமபுரி வடக்கு ஒன்றியம் மூக்கானுர் ஊராட்சி குமாரம்பட்டி கிராமத்தில் தேமுதிகவில் இருந்து விலகி சத்தியமூர்த்தி, சம்பத் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். இதில் மாவட்ட பொது செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், G. வெங்கட்ராஜ், தருமபுரி வடக்கு மண்டல் தலைவர்கள் நாகராஜ், துணைத்தலைவர் பழனிசாமி, பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பென்னாகரம் வடக்கு மண்டல் தலைவர் சிவலிங்கம், பொதுச்செயலாளர் ஆறுமுகம், மத்திய நலத்திட்டங்கள் பிரிவு வெற்றிவேல் மற்றும் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் D. k. மதியழகன் மற்றும் மாவட்ட துணை தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment