தருமபுரியில் மாணவர்களுடன் மாணவராக மாறிய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்

தருமபுரி அருகே அரசு பள்ளி மாணவர்களுடன் மதிய உணவு அருந்தி உணவின் தரம் குறித்து பரிசோதித்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பங்குநத்தம் கொட்டாய் பகுதியில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர் இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்காக அடிக்கல் நாட்டுவதற்காக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் இன்று அப்பள்ளிக்கு வந்திருந்தார். பள்ளிக்கு வந்து சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் நாட்டிய பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளிக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பது குறித்தும் கேட்டறிந்து அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக அவற்றை செய்து கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் ஆசிரியர்களிடம் தெரிவித்தார். அப்போது மதிய நேரம் என்பதால் பள்ளி மாணவர்கள் அனைவரும் உணவு அருந்த சென்றனர். சட்டமன்ற உறுப்பினரும் மாணவர்களோடு சேர்ந்து நின்று உணவினை பெற்றுக்கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது மாணவிகளிடம் தினம் தோறும் பள்ளியில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுக்காக சுவையான உணவு தயார் செய்த சமையலருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 
மேலும் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் உணவிற்காண அரிசியை இன்னும் தரமானதாக வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார். மாணவர்களோடு சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் உணவருந்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Comments