காட்டுவாசிகள் வாழும் இடமாக மாறிவரும் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் ! கேலி கூத்தும் செய்யும் அரூர் திமுக !
தர்மபுரி மாவட்டத்தில் முக்கியமான தொகுதியாகவும் பொருளாதாரம் செழிக்க கூடிய பகுதியாகவும் அரூர் வட்டம் இருந்து வருகிறது இந்த பகுதியில் சுமார் 3 லட்சம் மக்கள் வசதி வருகின்றனர். பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் கொடுக்க அரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி அரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் தீயணைப்பு துறை அலுவலகம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிர்ப்புறம் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் இந்த அலுவலகங்களுக்கு மக்கள் தினம்தோறும் சுமார் 700 மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
தங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பொதுமக்கள் , மற்றும் பொதுமக்களுக்காக அரசு பணி செய்வதற்காக அரசு ஊழியர்களும் இந்த பகுதிக்கு வரும் பொழுது துர்நாற்றங்களாலும் கொசு தொல்லையாலும் பாதிக்கப்பட்டு உடல் உபாதைகள் காய்ச்சல், இருமல்,, சளி, என்று பல்வேறு நோய்களுக்கு தள்ளப்படுகின்றனர். என்று சார்பு நீதிமன்றங்களில் குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் பொதுமக்களும் புலம்பி வருகின்றனர்.
காரணம் வட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் மற்றும் வெளிப்புறம் முழுவதும் முற்புதர்கள் தேவையற்ற குப்பைகள் கண்ணாடி பாட்டில்கள் பீங்கான்கள் கழிவுநீர்கள் இருப்பதால் அப்பகுதியில் அதிகமான கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கும் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் பெரிய பாதிப்பை உருவாக்குகின்றது. அவ்வபோது வெளியில் உள்ள ஆடு, மாடு , நாய் போன்றவை உள்ளே நுழைவதால் மக்கள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. சுற்று சுவரும் மோசமான நிலையில் இருப்பதால் நுழைவு வாயில் இல்லாமலும் இருப்பதால் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து மதுபானம் அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை உடைத்து விட்டு செல்லுவதால் வட்டாட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் பொதுமக்கள் காலை வைக்க அஞ்சு நடுங்குகின்றனர். இதுவரையில் வட்டாட்சியர் அலுவலக நிர்வாகமும் அல்லது அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகமோ பேரூராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. மக்களின் சேவையிலும் அரசு சார்ந்த பணிகளிலும் ஈடுபடும் பேரூராட்சி தலைவர்களும் அலுவலர்களும், அரசு ஊழியர்கள் இது பற்றி எந்த ஒரு நடப்திக்கையும் எடுக்காத போது இவர்களால் மக்களுக்கு என்ன பயன் இவர்களுக்கு அரசு சம்பளம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது.
.png)
தங்களை பாதுகாக்கவும் தான் பணியில் இருக்கும் அலுவலகத்தை சுற்றி சுத்தமாக வைக்கவும் தங்களை தேடி வரும் மக்களுக்கு ஆரோக்கியமான இடத்தை அமைப்பதற்கும் கூட ஒரு பொதுவான சிந்தனையில் இல்லாமல் இருப்பதால் இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுற்றுச்சூழல் பழுதடைந்து இரும்பு தடுப்பு பலகைகள் உடைந்து கீழே வீணாக துருப்பிடித்து கரைந்து போகின்ற நிலை உள்ளது. மக்கள் அமர்வதற்கு கூட இருக்கைகள் இல்லாமல் தரையில் அமரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக ஒரு புதிய மாவட்டம் உருவாகும் என்றால் அதில் அரூர் பகுதி முதல் பகுதியாக உள்ளது. ஆனால் இந்த பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வட்டாட்சியர்கள் பேரூராட்சி அலுவலர்கள் மக்களுக்கு ஆரோக்கியமான சுற்றுப்புறத்தை உருவாக்கக் கூட சிந்தனை இல்லாமல் இருப்பதால் நீதிமன்றத்திற்கு பின்னால் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்னால் சுற்றுச்சூழலை பற்றியும் இப்படி கரடு முரடான காடாக இயங்கிக் கொண்டிருக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தை கண்டும் தலையில் அடித்து புலம்புகின்றனர். இதே அரசு ஊழியர்களின் வீடாக இருந்திருந்தால் அவர்கள் உறங்கும் அறையாக இருந்திருந்தால் அவர்கள் பயன்படுத்தும் அறையாக இருந்திருந்தால் சொந்த இடமாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட நிலையில் விட்டிருப்பார்களா என்று அறிவிப்பு பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டில் கழிவு நீர் தேங்குகிறதா அங்கே கொசு உற்பத்தி ஆகிறது கரடு முரடான முட்புதர்கள் உள்ளதா தேவையற்ற செடிகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து மக்கள் மீது அபராதத்தை விதித்த தமிழக அரசு அரசு ஊழியர்கள் அரசு அலுவலகங்களை மிகக் கேவலமாக வைத்திருக்கிற சூழல் இருக்கும்பொழுது இந்த அதிகாரிகளுக்கு இந்த மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது இந்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். நுழைவு வாயில் தடுப்பு பலகைகள் இல்லாததால் பல்வெரு கட்சியைசார்ந்த நபர்கள் அரசு அலுவலகத்தின் சுவற்றில் கட்சி போஸ்டரை ஒட்டியுள்ளனர். மாற்று கட்சிதான் தமிழக அரசின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவை கேட்காமல் அரசு சுவர்களில் போஸ்டர், மற்றும் விளம்பரம் செய்கின்றனர். ஆனால் திமுக தொண்டர்களே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவை மீறி அரசு அலுவலக சுவர்களில் விளம்பரம் செய்திருப்பது கேலிகூத்தாக இருக்கிறது.
Comments
Post a Comment