கோட்டப்பட்டியில் சூதாட்டம் ஆடிய 15 பேர் கைது, ரூ.5,77,000 ரொக்கம், செல்போன், கார் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் -

கோட்டப்பட்டியில் சூதாட்டம் ஆடிய 15 பேர் கைது, ரூ.5,77,000 ரொக்கம், செல்போன், கார் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - 
அரூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி பெரிய ஏரி பகுதியில் தினம்தோறும் சூதாட்டம் நடைபெற்று வருவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையிலான காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது இருபதுக்கு மேற்பட்ட நபர்கள் பெரிய ஏரி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 15 பேர் கொண்ட கும்பலை கையும் களவுமாக பிடிக்கப்பட்டதில் ரூபாய் 5,77,000 ரொக்கம், இரண்டு கார், ஆறு இருசக்கர வாகனங்கள் மற்றும் 21 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 15 பேரை கோட்டப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு கைது நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் தப்பி ஓடி விட்டனர்.

Comments