MLA கோவிந்தசாமி தலைமையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டமேடு கிராமத்தில் 22 11 2022 அன்று கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்தசாமி அவர்கள் தலைமை வகித்தார். .ஊராட்சி மன்ற தலைவர் திரு முருகன் முன்னிலை வகித்தார் .முகாமில் சுமார் ஆயிரம் கால்நடைகள் பயனடைந்தன.  இம் முகாமில் கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி, கோழிகளுக்கு  ராணிக்கெட் தடுப்பூசி, சிகிச்சை குடற்புழு நீக்கம், மலட்டு தன்மை நீக்கம் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கலப்பின  கிடாரிக்கன்றுகளுக்கான பேரணி நடத்தப்பட்டு சிறந்த  கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நன்றாக கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் ,சான்றிதழும் வழங்கப்பட்டது. முகாம் பணிகளை உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் தலைமையில் டாக்டர் வாசவன் ,டாக்டர் ரவி, டாக்டர் மாபுகான், மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர் இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றினங்கள் கலந்து கொண்டன இம்மு முகம் சிறப்பாக நடைபெற்றது.

Comments