பள்ளி குழந்தைகளின் வாழ்த்து பாடலில் அரூர் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி தலைமையில் உதய நிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
நவம்பர் 27 இல் பிறந்த நாள் காணும் உதயநிதி ஸ்டாலின் : அரூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வரும் 27ஆம் தேதி அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது இந்த நிலையில் அருள் பேரூராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் கலந்துகொண்டு பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அலுவலகம் முன்பு கட்சியின் இருவர்ண கொடிகளை ஏற்றி வைத்து அதன் அருகில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி பேரூராட்சி தலைவர் இந்திராணி துணைத் தலைவர் சூர்யா தனபால் பேரூர் கழக செயலாளர் முல்லை ரவி வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி - திருமலை அரூர்
Comments
Post a Comment