ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வசதியை புனித அன்னாள் துவக்கபள்ளிக்கு கொண்டு வரவேண்டும் மா.செ.பழனியப்பன் அவர்களிடம் பள்ளி சார்பில் கோரிக்கை
புனித அன்னாள் துவக்க பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் - திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்துக்கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார் .
வரும் 27ஆம் தேதி அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் புனித அண்ணாள் துவக்க பள்ளியில் முன்னாள் அமைச்சர் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் கலந்துகொண்டார்.
பொதுக்குழு உறுப்பினர் மற்றும் பெற்றோர் கழக ஆசிரியர் தலைவர் கலைவாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்துகொண்டு உரையாற்றினார் பின்பு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது இந்தப் பள்ளிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை மனு மூலமாக லையோலா பள்ளி நிர்வாக குழுவினர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சி தாளாளர் அருள் பணி ஆல்பர்ட் ஜோசப், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்ப பணி பால் பெனடிக், புனித அன்னாள் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோஸ்மாஸ், ஆசிரியர்கள் அமுதா, மரியம்மாள், ஜோதி, நீதியம்மாள், ஜாய்ஸ் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment