அதிவேகத்தில் ( செல்வம் ) தனியார் பேருந்து அரசு பஸ் மீது மோதி விபத்து | மருத்துவ வசதி இல்லாமல் திணறும் பாப்பிரெட்டிப்பட்டி ஜி.எச். | காயம் அடைந்த மாணவர்களின் நிலை???..

அதிவேகத்தில் ( செல்வம் ) தனியார்  பேருந்து அரசு பஸ் மீது மோதி விபத்து |  மருத்துவ வசதி இல்லாமல் திணறும் பாப்பிரெட்டிப்பட்டி ஜி.எச். | காயம் அடைந்த மாணவர்களின் நிலை???.....
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே  சேலம் மெயின் ரோட்டில் தண்ணீர் தொட்டி பேருந்து நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ் காளிப்பேட்டையில் இருந்து பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றுக் கொண்டு வந்து இறக்கி விட்டுகொண்டிருந்த போது சேலத்தில் இருந்து அரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து அதன் அரசு பேருந்தின்  பின்பக்கத்தில் மோதியதில் 19 பள்ளி மாணவ மாணவிகள் 3 பொதுமக்கள் உட்பட 22 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் .அருகில் இருந்தவர்கள்  108 ஆம்புலன்ஸ்த்திற்கு கொடுத்த தகவலின் பேரில்   சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் காயம் அடைந்தவர்களை மீட்டு  பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று  சிகிச்சை சேர்த்தனர் அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்   ஒரு மாணவனுக்கு மட்டும் தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டதால்  அவரை மட்டும்  அரூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மருத்துவ வசதி குறித்து பொதுமக்கள் கூறுகையில் மக்களுக்கு விபத்து ஏற்படும்போதுதான் அரசியல் தலைவர்களோ, அதிகாரிகளோ வந்து நிற்கின்றனர். ஆனால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி குறித்து இங்கே இருக்கும் MLA, மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த எவரும் குரல் கொடுப்பதில்லை, என்பதை நினைக்கும்போது பெருமளவில் வேதனை அளிக்கிறது என்று புலம்புகின்றனர்.

Comments