அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினம் வெகுசிறப்பான கொண்டாட்டம்

அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று குழந்தைகள் தினம் வெகுசிறப்பாக் கொண்டாடப்பட்டது.
1)மாற்றுத்திறனாளி குழந்தைகளைச் சிறப்பு செய்யும் உறுதி மொழி 
ஏற்கப்பட்டது.
2)குழந்தைகள் தினத்தை மேலும் சிறப்பு சொய்யும் விதமாக 1000கும் மேற்பட்ட நாட்டுப் பப்பாளி மரக்கன்றுகளை மாணவிகளுக்குப் பரிசாக வழங்கி குழந்தகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் இப் பள்ளி மாணவி இரா.நந்தினி (8ஆம்வகுப்பு) அவர்களின் தந்தை திரு.ராஜா.
3)சுற்றுச்சூழல் குறித்து வன உயிரினங்களைப் பாதுகாப்போம் என வனத்துறை அதிகாரிகள் நடத்திய கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் பாராட்டுக்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார் உதவி வரும் வனப்பாதுகாப்பு அலுவலர் (தருமபுரி) அவர்கள்.
4) மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்.
5) ரோஜாவின் ராஜா நேரு அவர்களின் புகைப்படத்திற்கு ரோஜாக்களைக் கொண்டு மரியாதை செலுத்தினர்.
ஆக இன்று எமது பள்ளியில் ஐம்பெரும் விழாவாக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Comments