அக்டோபர் 31-ந் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் தர்மபுரி மாவட்ட விளையாட்டு பிரிவு பள்ளி கல்வித்துறை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி கல்லூரிகளைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி சாந்தி அவர்கள் குடியரசைத்து தொடங்கி வைத்தார் இந்த தேசிய ஒருமைப்பாட்டு ஓட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி சேலம் மற்றும் தர்மபுரி பிரதான சாலை பாரதிபுரம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.
Comments
Post a Comment