திமுக மாவட்ட செயலாளர்களின் பெயரை சொல்லி செய்தியாளரை மிரட்டிய திமுக பிரமுகர் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த வார்டு உறுப்பினர்கள்
![]() |
வெங்கடசமுத்திரம் கிராம சபை கூட்டம் |
தமிழகம் முழுவதும்
நவம்பர்– 1 இல் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2022 அன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். அதனை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வெங்கடசமுத்திரம் பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை துணைத்தலைவர் உட்பட 12 வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இந்த பஞ்சாயத்தில் தலைவராக இருக்கும் மலர் மாரியப்பன், 12 வார்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு, குடிநீர் பிரச்சனை போன்ற அடிப்படை வசதிகளை செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் "வார்டு உறுப்பினர்கள்" அடிப்படை வசதிகளை கூட செய்து தரமுடியாத தரத்தில் உள்ளனர் என்று எங்களை தவறாக பேசி வருகின்றனர். ஆனால் நாங்கள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திமுக ஊராட்சி மன்றத்தலைவர் மலர் மாரியப்பன் அவர்களிடம் கேட்டால் ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை, அதுமட்டுமில்லாமல் மாவட்ட ஆட்சியர் சொல்லிக்கூட மூன்று மாதம் கிடப்பில் போட்டுள்ளார்.
இதனால் துணைத்தலைவர் உட்பட 12 உறுப்பினர்களின் நர்பெயர்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பஞ்சாயத்திற்கு தேவையான குறைகளை பொதுமக்கள் கேட்கும்போது திமுக கட்சியைச்சார்ந்த முன்னாள் பஞ்சாயத்துதலைவர் பாரதி என்பவர் நீங்க எதுக்கு இதெல்லாம் கேக்குறிங்க தனியாவாங்க பேசிக்கலாம் என்று பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்கள் வீடியோ எடுக்கும் போது செய்தி மட்டும் வரட்டுமே மாவட்ட செயலாளர்கிட்ட சொல்லி உங்கள என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று நீ எந்த செய்தியாளர் நீ எதுக்கு இங்க வருகிறாய், செய்தியாளர்கள் சேர்ந்து பன்ன வேலையாளதான் 12 உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தை புறக்கனிச்சாங்க, முதலில் செய்தியாளர்களை வெளியே அனுப்புங்கள் என்று அருகில் உள்ள பாதுகாப்பில் உள்ள உதவி காவல் ஆய்வாளரிடம் அழுத்தமாக மிரட்டும் தோனியில் செய்தியாளர்களை அவமதித்துள்ளார்.

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த வார்டு உறுப்பினர்கள் |
இது செய்தியாளர்களை மட்டும் அவமதிக்கும் செயலாக இல்லை ஆட்சி அமைத்த நான்காவது நாளில் செய்தியாளர்களுக்கு பல சலுகைகளும் பாதுக்கப்பும்,பெரும் மதிப்பும் கொடுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலினை அவமதித்த சம்பவமாகும், ஊராட்சி மன்ற தலைவர் மலர் மாரப்பன் பேசவேண்டியதல்லாம், முன்னால் தலைவர் பாரதி பேசுகிறார். அப்படியென்றால் வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் தான் செய்யும் ஊழல்களையும் தவறுகளையும் மறைக்கவே இது போன்ற ஆட்களை வைத்து மறைமுகமாக மிரட்டுகிறார்.
இதனால் மாவட்ட ஆட்சியர் வேங்கட சமுத்திரம் ஊராட்சி மன்றத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 12 வார்டு உறுப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மற்றும் இந்த கிராமசபை கூட்டத்தில் இதில் 32 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment