![]() |
இதில் முக்கிய நபராக ராஜகோபால் DEO |
ஒரு காலத்தில் தருமபுரி மாவட்டம் என்று சொன்னால் வறட்சி பூமி , கல்வியில் பின் தங்கிய மாவட்டம், சாதிகொடுமைகளுக்கு பேர் போன மாவட்டம் என்று பல்வேறான குற்றசாட்டுகளும் விமர்சனங்களும் இந்த மண்ணின் மீது பரவியது. இந்த நாட்டில் சுதந்திரம் அடைந்த பிறகும் இன்னும் பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு கிராமங்களிலும், பல்வேறு நிறுவனங்களிலும், சாதிகொடுமைகளும், ஏற்ற தாழ்வுகளும், அடக்குமுறைகளும், இருந்துகொண்டிருக்கின்றன.
இதுபோன்ற அரக்கர்களின் செயல்பாடுகள் என்னவோ தமிழகத்தில் குறைந்து வருகின்றன பொதுமக்கள் இடத்தில் இந்த சாதிய பாகுபாடுகளும் அடக்கு முறைகளும் குறைந்தாலும் பள்ளி க்கூடங்களில் மற்றும் கல்லூரிகளில் இது மீண்டும் 100 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தார்களோ அதே போன்ற நிலைக்கு ஆசிரியர்கள் தரப்பில் மறைமுகமாக சாதி ரீதியான வன்மத்தை மாணவர்களிடையே தூண்டி வருகின்றது.
என்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாரப்பூர்வமாக வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டு வருவது உண்மை ! பல்வேறு சோசியல் மீடியாக்களிலும் செய்திகளிலும் வந்ததை நாம் உணர்ந்தோம் .
பிறகு இது போன்ற நிகழ்விற்கு முற்றுப்புள்ளியாக தற்பொழுது இருக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மற்றும் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைகளையும் மீடியாக்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை மீறி தகவல் கொடுக்கக் கூடாது என்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதையெல்லாம் மீறி மறைமுகமாக ஒரு சில மாவட்டங்களில் "சாதியவாதிய கும்பல்கள்" - மாணவர்களிடையே நல்ல நட்புறவாக இருக்கும் ஆசிரியர்கள் மீது போட்டி பொறாமையோடு இருக்கும் ஒரு சில ஆசிரியர்கள் நிருபர்களுக்கு செய்தி கொடுத்து சமூக வலைத்தளத்தில் மற்றும் செய்தித்தாள்களிலும் ஒரு சில நேர்மையான ஆசிரியர்களை மன உளைச்சல் ஏற்படும் அளவிற்கு செய்தி போடச் சொல்லி பழி வாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு சாதாரணமான நிகழ்வை திரித்து அதை ஊதி பெரிதாக்கி சமூகவளைதளம் மூலம் பரப்பி குறிப்பாக அந்த ஆசிரியை மீது கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே செயல்படுவதாக அமைந்துள்ளது. இதுபோன்ற சாதியவாதிய கும்பலுக்கு துணையாக மாவட்ட கல்வி அலுவலரும், முக்கியமாக துணை கல்வி அதிகாரி, அதோடு திமுக (மற்றும் ) அதிமுகவில் உள்ள ஒரு சில நபர்களும் பாஜகவில் உள்ள நபர்களும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து தன்னுடைய சாதி குடும்பங்களை இணைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது. தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நடைபெற்று வருவது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ! என்று சமூக ஆர்வலர்கள் வேதனை அடைகின்றனர்.
என்னதான் திமுக, சாதிய அடக்குமுறைகளுக்கும் பாஜகவிற்கும் எதிராக குரல் கொடுத்தாலும் ( தருமபுரி அதிமுகவில் ) உள்ள பெரும்பான்மையான சாதிவெறி கொண்ட நபர்கள் மூளை குழம்பி பித்துப் பிடித்தவர் களைப் போல யாரைக் கண்டாலும் என்ன குற்றம் சுமத்தலாம்.
எப்படி எந்த வழியில் பெயரைக் கெடுக்கலாம் என்ற சிந்தனையில் இருந்து கொண்டு இருக்கும் இவர்கள் எங்கு போதிக்கும் வேலையில் ஈடுபட போகிறார்கள். இது போன்ற கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுவது தருமபுரியில் பள்ளிக்கூடங்களில் உள்ள இந்த சாதி வெறி கும்பல்கள் மாணவர்களுக்குள்ளேயும் ஆசிரியர்களுக்குள்ளேயும் சாதி வெறி தூண்டுதலை ஏற்படுத்தி வருகின்றது.
இதற்கு அதிமுக-வும் அய்யோ அதிமுகவில் இருக்கும் தனது ஜாதிகாரணுக்கு பிரச்சனை வந்துவிடும் என்று நோக்கில் மறைமுகமாக திமுக மற்றும் தருமபுரியில் உள்ள பாஜகவும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்பட்டு வருவது தற்போது திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் இடையே மிகப்பெரிய வருத்தத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரியில் உள்ள முக்கிய நகரபகுதிகளில் மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளில் சாதியவாதி கும்பல்களால் பெண் ஆசிரியர்கள் , பாலியில் ரீதியாகவும், மனஉளைச்சல் காரணமாக பெருமளவில் பாதிக்கபடுகின்றனர் என ஒரு பக்கம் ஆசிரியர்கள் வட்டாரத்தில் புலம்பி வருகின்றனர்.
ஆதிக்க சாதி கொண்ட வெறிநாய் போல திரியும் ஒரு சில ஆண் ஆசிரியர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் அது குடும்ப பிரச்சனை என்று புகாரை மாற்றி விடுகிறது .
தருமபுரி மகளீர் காவல்துறை !...
மற்றும் எங்க சாதி காரங்க மீது எந்த ஒரு வழக்கும் வரக்கூட்டாதென்று மறுபக்கம் திமுகவில் உள்ள முக்கிய நபர்கள் காவல்துறைக்கு அழுத்தத்தை கொடுத்து வருவதாக காவல்நிலையத்தில் புலம்புகின்றனர்.
இந்த தர்மபுரி மண் மிகவும் ஏழை மக்களை கொண்ட பாவப்பட்ட மண் இது மாறவேண்டும் என்றால் கல்வி மட்டுமே அப்படிப்பட்ட கல்வியை மாணவர்களுக்கு சொல்லிகொடுக்கும் பெண் ஆசிரியர்களுக்கே இந்த நிலை என்றால் பள்ளிகூடத்தில் பயிலும் மாணவிகளுக்கு என்ன நிலை என்று யோசித்து பார்க்கும் காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதே போல பாதிக்க படும் ஆசிரியர்கள் யாராவது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் கொடுத்தால் யாரும் கண்டுகொள்வதில்லையாம் அப்படி என்றால் இந்த தர்மபுரி மாவட்ட கல்வி நிர்வாகம் எவ்வளவு கேவலாமான நிலையில் இருக்கும் என்பதை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் .
பள்ளிக்கூடங்களில் சாதி ரீதியான கட்சி ரீதியான நிகழ்ச்சிகள் நடைபெற்றால் அதற்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அவர்களை செயல்பட விடாமல் செய்யும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் அவரும் ஆதிக்கம் கொண்ட நபர்களுக்கு துணையோடு இருந்து கொண்டு தருமபுரி மாவட்ட அலுவலர் கள் செயல்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. தற்பொழுது திராவிட கட்சிகளை சார்ந்தவர்களும் சமத்துவம் பேசும் மக்களும் இது போன்ற நிகழ்வு தரருமபுரிக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது ! என்று வேதனை அடைந்து வருகின்றனர்..
பள்ளி மாணவர்களிடையே இந்த டீச்சர் நம்ம சாதிடா, அந்த டீச்சர் வேற சாதிடா என்று மாணவர்களிடம் தவறான சிந்தனையை உருவாக்குகிறார்களாம் இலக்கியம்பட்டி பள்ளி ஆசிரியர்கள்.
பள்ளிக்கூடங்களில் ஆண் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள் மீது பொறாமை கொண்ட மற்றொரு தரப்பில் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு மாவட்டம் கல்வி அலுவலர்களுக்கு தகவல் கொடுத்து இவர்கள் மோசமானவர்கள் பள்ளி மாணவர்களிடையே தவறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இவர்கள் கலாச்சாரத்தை மீறுகிறார்கள் என்று கட்டுக்கதை அவிழ்த்துவிட்டு நாகரிகமான ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மறைமுகமாக தகவல் கொடுப்பதும் அதை செய்தி நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்து ஒட்டுமொத்த தருமபுரி ஆசிரியர்களுடைய நிலைப்பாட்டியும் தமிழக அரசினுடைய நிலைப்பாட்டியும் சீர்குழைக்கும் வகையில் ஒரு சில சாதி வாதியா ஆசிரியர்களும் அதற்கு துணை போக்கும் இந்த தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலர்களும் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடான செயல்...
இது போன்ற சாதிய அடக்கம் முறைகளும் ஆசிரியர்களுக்குள் நடைபெறும் காழ்ப்புணர்ச்சிகளும் மாணவர்களுக்குள்ளும் ஆசிரியர்களுக்கும் இருக்கும் நல்லுறவை சீர்குலைக்கும் வகையிலும் இருக்கும் மனநல பாதிப்பு கொண்ட ஆசிரியர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு மருத்துவம் பரிசோதனை செய்து மாணவர்களை மனநல பாதிக்கப்பட்ட சாதியவாதிய ஆசிரியர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பது தருமபுரி மாவட்ட மக்களின் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் ஓங்கி ஒலிக்கும் குரலாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது...
Comments
Post a Comment