மினி கண்டைனர் லாரியில் 7.50 லட்சம் மதிப்புள்ள 1100 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல் போலீசார் ரகசியம் அம்பலமானது ! ஷாக்கான தர்மபுரி சிட்டி....
மினி கண்டைனர் லாரியில் 7.50 லட்சம் மதிப்புள்ள 1100 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல் போலீசார் ரகசியம் வெளிச்சமானது ! ஷாக்கான தர்மபுரி சிட்டி....
தருமபுரி மாவட்டம் வழியாக அதிக அளவில் குட்கா பொருட்கள் நூதனமான முறையில் வாகனங்களில் கடத்தப்பட்டு வருகின்றன. இது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தும் வாகனங்கள் மற்றும் பொருட்கள் கடத்தலில் நடைபெறும் நபர்கள் உள்ளிட்டவற்றை தருமபுரி மாவட்ட காவல் துறையினரும் தொடர்ந்து கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாளையம் சுங்க சாவடி அருகே தொப்பூர் காவல் நிலைய போலீசார் நெடுஞ்செழியன் சுரேஷ் பிரதாப் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக பதிவேண் கொண்ட மினி கண்டெய்னர் லாரியை வடமாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் ஓட்டி வந்துள்ளனர். கண்டெய்னரை நிறுத்திய பொழுது அதிலிருந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கண்டெய்னரை திறந்து பார்த்துள்ளனர் வண்டி முழுவதும் காலியாக இருந்துள்ளது. அதனுள் ஒரு சிறிய ரகசிய அறையை அமைத்து அதற்குள் பல மூட்டைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஓட்டுனருடன் வந்த உதவியாளர் மண்டு சைகியா-வை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வாகனம் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு தருமபுரி வழியாக சேலம் நோக்கி சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து தொப்பூர் காவல் நிலையத்திற்கு வாகனத்தை கொண்டு வந்து சோதனை செய்து ரகசிய அறையை திறந்து பார்த்தபொழுது அதற்குள் மூட்டை மூட்டையாக ஹான்ஸ் பான் பராக் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுமார் 140 மூட்டைகளில் 7.50 லட்சம் மதிப்புள்ள 1126 கிலோ குட்கா பொருட்களை ரகசிய அறையில் கடத்தி வந்ததையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் தப்பி ஓடிய ஓட்டுநரையும் தேடி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அம்பலமாகி மக்களிடையேவும் காவல்துறை அதிகாரிகளிடமும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
Comments
Post a Comment