கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான
அளவிற்கு மழை பெய்து உள்ளபோதிலும் கேரள நீர்ப்பாசனத்துறை முழு நீர்தேக்க
மாவட்டத்திற்கு பதிலாக இருப்பு நிலையைக் குறைத்துப் பராமரிக்கிறது என்பது
தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,
அணையின் நீர் மட்டம் குறைவதால், இத்திட்ட பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்ட அளவைவிட குறைந்த அளவில் தான் தண்ணீரை வழங்க முடிகிறது என்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சுட்டி காட்டியுள்ளார் சிறுவாணி அணையில் முழு நீர்த்தேக்கம் வரை நீரைச் சேமித்து வைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் வழக்கமான கூட்டங்களை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கேரள அரசின் நீர்வள ஆதார துறை கூடுதல் தலைமைச் செயாலாளரையும் அனுகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர் அவர்கள் பலமுறை தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் கேரள நீர்ப்பாசனத்துறை, 878.50 மீட்டர் அளவிற்கு, அதாவது முழு நீர் தேக்கம் மட்டம் வரை, சிறுவாணி அணையின் நீர் இருப்பின் மட்டத்தை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், முழு கொள்ளளவிற்கு நீரைச் சேமித்து வைக்காவிட்டால் சிறுவாணி நீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், அடுத்த கோடைகாலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கேரள நீர்ப்பாசனத்துறை 03.01.2022 முதல் நீர்வரத்து வரும் வால்வ் -4- ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சூழ்நிலையில், கேரள அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த வால்வு 4ன் ஓட்டத்தை ஒழுங்கு படுத்த முடியாது என்றும் கேரள நீர்ப்பாசனத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் தமிழக முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டத்தின் பிற பயனாளிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் எதிர்காலத்தில் 878.50 மீட்டர் வரை, சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை பராமரிக்கவும் மேலும் ரூ 101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க ஏதுவாக, சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் வினியோகத்தை அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர் வலியுறுத்தியுள்ளார்
செய்தி சங்கீதநிலவன்
Comments
Post a Comment