அரூர் அருகே கல்லூரி பேருந்தும் பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து , கல்லூரி பேருந்து ஓட்டுனர்கள் தன்னை ஹீரோவாக நினைக்கின்றனர். அரூர் மக்கள்..!!!

தர்மபுரி மாவட்டம் அரூர் -  ஊத்தங்கரை அருகே (  காட்டேரி ) என்ற பகுதியில் தனியார் கல்லூரி பேருந்தும் தனியார் பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து விபத்தில் காயம் அடைந்தவர்களின் விவரம் பற்றி இன்னும் வெளிவரவில்லை இது பற்றி  காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. பெற்றோர் தரப்பில் கூறும்பொழுது தனியார் கல்லூரி, பள்ளி, மற்றும் தனியார்  பேருந்து ஓட்டுநர்கள் தன்னை ஹீரோவாக நினைத்துக் கொண்டு ஏதோ மிகப்பெரிய சாதனை பயணத்தில்  பயணிக்கிறோம்,  என்ற சிந்தனையில்  தன்னை எல்லோரும் சிறந்த ஓட்டுநராக நினைக்க  வேண்டும் என்ற எண்ணத்தோடு தனியார் பள்ளி பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளும்,  கல்லூரி பேருந்து ஓட்டுநர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும்.  ஆகவே போக்குவரத்து காவல்துறையானது அவ்வபோது தனியார் பள்ளி பேருந்துக்கும் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனருக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கும் அரசு பேருந்து,  ஓட்டுநர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  பொறுமை மிகவும் அவசியமானது என்பதை அழுத்தத்தோடு அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.  காரணம் ஒட்டு மொத்த உயிர்களும் ஓட்டுநர் இடத்தில் உள்ளது.  அது மட்டும் இல்லாமல் அந்த ஓட்டுனரின் குடும்பம் அவரை நினைத்து கொண்டிருக்கும் எப்போது வீடு திரும்பவார் என்று அந்த ஏக்கம்  குழந்தைகளைப் பெற்ற,  பெற்றோர்களாகிய எங்களுக்கும் ஓட்டுநர்களுக்கும்,  இருக்கும் என்பதை எல்லோரும் உணர வேண்டும் என்ற கருத்தை பெற்றோர்கள் முன் வைக்கின்றனர்

Comments