செய்தியாளர் மீது போதையில் கார் ஏற்றி விபத்து ஏற்படுத்திய அரூர் துணை காவல் ஆய்வாளர் - எதுக்கு பிரச்சன காவல்துறை உங்கள் நண்பன் !! டீலா நோ டீலா???
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் |
அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் காரின் நம்பரை பதிவுசெய்து செய்தியாளர் சீனிவாசன் என்பவரிடம் கொடுத்துள்ளனர். பிறகு அந்த கார் சென்ற வழியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்த கார் அரூர் காவல்நிலையத்தின் பின்புறம் இருக்கும் காவலர் தங்கும் விடுதி அருகே இருந்துள்ளதது.
இந்த காரை பற்றி அருகில் விசாரிக்கும்போது தள்ளாடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த துணை காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மரியாதை இல்லாமல் தரைக்குறைவாகவும், என் மனைவியை நீ கைய பிடிச்சி இழுத்த என சொல்லி ஸ்டேஷன்ல வச்சி சாகடித்துவிடுவேன்னு ஜெய் பீம் படத்தில் காவல் துறை எப்படி அப்பாவி மக்களை கொலை செய்து மறைக்குமோ அதே ஆதிக்க சிந்தனையில் தன்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற தோரணையில் பேசியுள்ளார் ராமகிருஷ்ணன்..பிறகு தன்னை காப்பாற்றி கொள்ளவும் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தன்னை இடித்துச்சென்ற கார் கண்ணாடியை உடைத்துளார். இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் செய்தியாளரை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பலத்த காயமடைந்த ரத்தம் வடிந்த நிலையில் துணை காவல் ஆய்வாளர், செய்தியாளர் சீனிவாசனை கீழே தள்ளியதால் இன்னும் அதிகாமாக ரத்தம் வந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவந்த செய்தியாளரை அரூர் காவல் ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை செய்துள்ளார். பிறகு இரண்டுநாள் 3 நாள் கழித்த பின்புதான் ராமகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பிறகு தமிழ்நாடு,மாவட்டம்,தாலுகா வாரியாக உள்ள பத்திரிக்கையாளர்கள்,மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் இதுதான் நடவடிக்கையா என அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு அவர்களிடம் கேட்ட போது, காவல்த்துறையும்,செய்தியாளரும், நட்புறவா இருக்கோம் இதை எதுக்கு பெருசு படுத்துறீங்க, அப்புறம் எப் ஐ ஆர் போட்டா சீனிவாசனால வெளிநாடு போகமுடியாது, எப் ஐ ஆர் போட்டா ரண்டு பேரு மேலையும் போடணும் பாத்துக்கோங்க எதுக்கு பிரச்னை என்று மறைமுகமாக காவல்துறை மிரட்டுகிறது.
அதாவது சாதாரண மக்கள் வாகனம் ஓட்டும்போது இதுதாண்டா சரியான வசூல் டைம்னு டார்கெட் வச்சி மதுபோதையில் வந்ததர்காக (பிரிவு 188) - ( பிரிவு 1988 ) ன் படி வழக்குப்பதிவு செய்து 10000 ஆயிரம் அபராதம் விதிச்சி 15 நாள் சிறைதண்டனை கொடுப்பாங்க,
அதே காவல் துறை செஞ்சதுன்னா நமக்குள்ள எதுக்கு பிரச்சன காவல்துறை உங்கள் நண்பன்னு முடிச்சுடுவாங்க....
Comments
Post a Comment