மாணவர்கள் தவறான முடிவெடுக்க வேண்டாம் -" நீட் தேர்வு "மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தடங்கம் சுப்பிரமணி வேண்டுகோள்

தர்மபுரி : நேற்று இரவு வெளியான ‘நீட்' தேர்வு முடிவில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 51.3 ஆகும். இதுவும் கடந்த ஆண்டைவிட குறைவு. மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடந்த தேர்வில் 715 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, டெல்லி மாணவரும், கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேரும் 715 மதிப்பெண் பெற்று பட்டியலில் இருக்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா 30-வது இடத்திலும், மாணவி ஹரிணி 43-வது இடத்திலும் உள்ளனர். தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி கூறுகையில், தமிழகத்தில்  நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று காலை அம்பத்தூர் பகுதியைசேர்ந்த   மாணவி லக்ஷனா ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது மனவேதனையை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வை தடை செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முயற்சி எடுத்து வருகிறார். நம்பிக்கையாக இருங்கள் நமக்கு தேர்வின் வெற்றி முடிவுகளை காட்டிலும் தோல்வி எப்படி வந்தது என்று  கடந்து  போக மனமிருந்தால் வாழ்விலும் சரி,  தேர்விலும் சரி,  தோல்வி கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர்கள் முக்கியம் என்பதை  நினைவில் கொள்ளுங்கள், மற்றும் மாணவர்களை பெற்றோர்களும் எல்லாவிதத்திலும் உன்னிப்பாக கவனித்துவாருங்கள்  என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Comments