அரூர் காவல்துறையை தூங்கவிடாமல் செய்ததா சரஸ்வதி சில்க்ஸ் ? முன்னாள் மாவட்ட ஆட்சியரின் தலையீடு ! எப்போது முக ஸ்டாலின் ரைடு ? காவல்துறை புலம்பல் !!!!...
விமர்சனத்திற்கல்ல... சனநாயகத்தின் விழிப்புணர்வுக்கு ! பாதிகப்பட்ட காவல்துறையின் குரல் !
இரவு பகலாக வெயிலிலும், மலையிலும், மக்களுக்காக சேவை செய்யகூடியவர்களில் ஒரு துறை காவல்துறை, தினந்தோறும் காவல் நிலையங்களுக்கு பொதுமக்கள் மனுக்கள் கொடுத்துச் சென்று மற்றும் பொதுமக்கள் தங்களுடைய ஆதங்கத்தில் அவர்களோடு உரையாடும் பொழுது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பிறகு ஒரு சில காவல்துறைக்கு மன அழுத்தம் ஏற்படும்.
அதே அழுத்தத்தோடு இரவு நேர பணிக்கு அந்த காவல்துறையே அமர்த்தப்படுவார்கள் பிறகு பணிகள் முடிந்த பின்பு வீட்டிற்கு வந்து உறங்கலாம் என்று வந்து படுத்தால் தூக்கமே வருவதில்லை காரணம் அருகில் உள்ள சரஸ்வதி சில்க்ஸ் முதலாளித்துவத்தின் ஆதிக்கமும் தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி அவர்கள் செய்த வேலை.. என்று அரூர் காவல் குடியிருப்பில் குடியிருக்கும் காவல்துறை புலம்பியதை கண்டு என்னதான் நடந்தது என அவர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்க தொடங்கினோம்.
அரூர் ரவுண்டானா பகுதியில் மக்கள் மத்தியில் பிரபலமான சரஸ்வதி சில்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக காவல்துறை குடியிருப்பிற்கு பின்புறம் சுமார் 20 ஏக்கரில் நிலம் உள்ளது, இந்த நிலத்திற்கு எந்த ஒரு வழித்தடமும் கிடையாது. காவல்துறை குடியிருப்பை ஒட்டி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
அந்த சுற்று சுவரை கடந்து தான் சரஸ்வதி சில்க்ஸ் நிறுவனத்தின் சொந்தமான நிலத்திற்கு செல்ல முடியும்.
வழித்தடம் இல்லாததால் அந்த 20 ஏக்கர் நிலத்திற்கு சரியான மதிப்புகள் இல்லை. இதனால் முன்னாள் இருந்த மாவட்ட ஆட்சியர் மலர்விழி அவர்களின் உதவியோடு அந்த இருவது ஏக்கர் நிலத்திற்கு வழித்தடம் உருவாக்கப்பட்டது.
தற்போது இந்த நிலத்தின் ஒரு சென்டின் மதிப்பு 12 லட்சம் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கு முன்பு காவல்துறை குடியிருப்பு அமைதியான நிலையில் இருந்து வந்தது.
அப்போதைய மாவட்ட ஆட்சியர் மலர்விழி துணையோடு அத்துமீறி காவல்துறை குடியிருப்பின் சுற்றுச்சூழல் இடிக்கப்பட்டு அந்த 20 ஏக்கர் நிலத்திற்கு வழி தடம் ஏற்படுத்தியதால் காவல்துறையின் குடியிருப்பு பகுதிகளில் அமைதியான நிலைக்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.
மற்றும் காவல் துறையின் பெண் குழந்தைகளுக்கும், காவல்துறை குடியிருப்பு பகுதியில் இருக்கும் பெண்களுக்கு காவல்துறையின் உறவினர்களுக்கும் சரியான பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது, என்று காவல்துறை வட்டாரங்களில் குழம்பி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் கஞ்சா குடிப்பதற்கும் குடிப்பழக்கத்திற்கும் சரஸ்வதி சில்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் சமூகவிரோதிகளுக்கு ஒரு பாதுகாப்பான சுதந்திரமான இடமாக அமைந்துள்ளது.
இதனால் காவல்துறை குடியிருப்பு பகுதிக்கு பாதுகாப்புகள் இல்லை என்றும் இரவு நேர பணியை முடித்துவிட்டு ஓய்வெடுக்கும் காவல்துறைக்கும் நிம்மதி இல்லாத நிலை உருவாகியுள்ளது என்று காவல்துறை வட்டாரத்தில் புலம்பி வருகின்றனர்.
மறுபக்கம் சரஸ்வதி சில்க்ஸ் நிறுவனத்திற்கு சாலை வசதி வழித்தடத்தை முன்னாள் இருந்த மாவட்ட ஆட்சியர் மலர்விழி உருவாக்கியதன் அடிப்படை பணம், செல்வாக்கு கொண்ட வலிமைகொண்ட நபர்களுக்கு அரசாங்கமும் அரசு ஊழியர்களும் வளைந்து கொடுப்பார்கள், எளியவனை கண்டால் எட்டி உதைப்பார்கள் என்று உணருகிறோம்.
ஒரு காவல்துறையின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் கட்டிய சுவரை இடித்து ஒரு தனி நபருக்கு வழித்தடம் உருவாக்கியது எந்த அடிப்படையில் ! பணம் ஆதிக்கமா ? இல்ல சமூக ஆதிக்கமா?... என்ற கேள்வி எழுகிறது.?
அதாவது ஒரு சாமானிய மக்கள் தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்வதற்கு வழித்தடம் கேட்டும், சுடுகாட்டிற்கு பாதை இல்லை என்றும், பலமுறை மாவட்ட ஆட்சியர்களை அப்போது சந்தித்து மனுக்கள் கொடுத்துள்ளனர்.
அதில் பலமனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க இதே காவல்துறைதான் முயற்சி செய்து வந்தது. ஆனாலும் பல்வேறு ஏழை மக்கள் இன்னும் தன்னுடைய நிலத்திற்கு பாதையில்லாமலும் வீட்டிற்கு இன்னும் பட்டா வாங்க முடியாமலும் அலைந்து வருகின்றனர் என்பது அரூர் காவல்துறைக்குத்தான் தெரியும்.
பாதிக்கப்பட்ட பல நூறு குடும்பங்களுக்கும் நிலம் பிரச்சனை சம்பந்தாமாக உதவாத ஒரு மாவட்ட ஆட்சியர் ஏன் இந்த தனிப்பட்ட நபருக்கு வழித்தடத்தை உருவாக்க வேண்டும், ஏன் என்றால் அவர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவுக்காரர் என்பதுதான்.
ஒரு சாமானிய மனிதர்களுக்கும் ஏழை மக்களுக்கும் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கும், களத்தில் நேரடியாக இறங்கி இதே போன்று வழித்தடத்தை உருவாக்கியிருந்தால் நிச்சயமாக, அரூர் காவல் துறை பெருமைப்பட்டு இருக்கும்,
காரணம் என்னவென்றால் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி அவர்களின் காலத்தில் காவல்துறைக்கு பல்வேறு நெருக்கடிகளும் மனுக்களும் வந்து குவிந்தன.
அதற்கெல்லாம் முன்னால் இருந்த மாவட்ட ஆட்சியர் மலர்விழி அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து எந்த ஒரு வார்த்தைகளோ பேசவில்லை, காவல்துறையின் மன அழுத்தங்களும் நிலைப்பாடுகளும் பற்றி கேள்வி கேட்டதில்லை. வழித்தடம் இல்லாமல் சிரமப்படும் இப்பகுதிவாழ் மக்களுக்கும் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்து விவாதம் செய்யும் முதலாளித்தவருக்கும் இடையில் காவல்துறைதான் நேரில் சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம்.
சட்டப்படி மக்களுக்கு நீதி வேண்டும் என்று காவல்துறையாகிய நாங்கள் முன் நின்று பணிகளை செய்தாலும் எங்களுடைய பணிகளையும், தூக்கத்தையும், நிம்மதியும், கெடுப்பதற்கு ஏதோ ஒரு ஆதிக்கத்தோடு, அரசு ஊழியர்களும், அரசியல்வாதிகளும், செல்வாக்கு ஆதிக்கம், உள்ள நபர்களுக்கு உடந்தையாக இருப்பது வெளிச்சமாகிவிட்டது.
இது போன்ற நடவடிக்கைகளை முன்னாள் இருந்த அதிமுக - ஆட்சியில் பல அரசு ஊழியர்கள் ஊழல் செய்து வந்துள்ளனர். ஆவர்களை ஆய்வு செய்தால் அவர்களிடம் பலகோடிகள் கருப்புப்பணம் இருக்க வாய்ப்பிருக்கிறது.
தயவு செய்து இந்த ஆட்சியில் இருக்கும் மரியாதைக்குரிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆராய்ந்து யார் ? யார் ? இப்படிப்பட்ட பண அதிக்கம் கொண்ட நபர்களுக்கு துணை நின்றார்களோ ! அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என அரூர் காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நிருபரின் கேள்வி -
வழித்தடம் இல்லாமல்தான் சரஸ்வதி சில்க்ஸ் முதலாளியும் கஷ்டபட்டிருப்பார்.
பாமர மக்களும் வழித்தடம் இல்லாமல் எப்படி சிரமத்திற்கு உள்ளாகியிருப்பார்களோ' அதே நிலைமையில் தான் இந்த சரஸ்வதி நிறுவனமும் சிரமத்தில் உள்ளாகியிருப்பார். அதுமட்டுமிலாமல் அவர் தன்னுடைய 20 ஏக்கர் நிலப் பங்கில் சுமார் 20 சென்ட் நிலத்தினை அரூர் காவல்துறைக்கு பின்புறம் உள்ள கோவிலுக்கு இலவசமாக கொடுத்துள்ளார் என்பது தெரியுமா? அந்த இடத்தில் ஒரு சில காவலர்களின் வாகங்கள் நிற்கிறதே
அது உங்களுக்கு தெரியுமா ?
சரஸ்வதி சில்க்ஸ் நிறுவனத்திற்கு வழி அமைத்து கொடுத்தை நாங்கள் முழுமனதோட தவறு சொல்லவில்லை !
அந்த வழித்தடதால் பலசமூக விரோதிகள் வருவதற்கான வாய்ப்பிருக்கும், எங்கள் குழந்தைகளுக்கும் எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும்? அந்த வழித்தடம் காவல்துறையின் கேம்பஸ்ங்க., அதுல எப்படிங்க மத்தவங்களுக்கு வழி விடமுடியும் சொல்லுங்க, தனிப்பட்ட நபருக்கு உதவி செய்யும் அரசு அதிகாரிகள் சாமானிய மக்கள் சுடுகாடு இல்லாமலும், பாதையிலாமலும், இருக்கின்றனர் அவர்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தாருங்கள் அவங்களும் மனுசங்கதானே !!!...
Comments
Post a Comment