நகைகளை பாதுகாக்க தான் வைத்த மின்சாரத்தில் தன்னுடைய உயிரை பறிகொடுத்த கொடூரம் ! மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாப நிலை

சீர்காழி அருகே வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து வசித்து வந்த மூதாட்டி அதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியை தெருவை சேர்ந்தவர் அன்பழகி வயது 68 சீர்காழி நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கணவர் இறந்த நிலையில் குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார் தன்னுடைய வீட்டின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல மின் இணைப்பு கொடுத்துவிட்டு தூங்கியவர் இன்று காலை மின் இணைப்பை துண்டிக்காமல் பீரோவை திறக்க முற்பட்டு உள்ளார் அப்போது மின்சாரம் தாக்கியதில் அன்பழகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெகு நேரம் கடந்தும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது தான் மின்சாரம் தாக்கி மோதாட்டி இறந்தது தெரியவந்தது இது குறித்து தகவல் எரிந்த சீர்காழி போலீசார் அன்பழகியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Comments