மக்கள் பணியில் இறங்கிய பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா ! - ஒரு அதிகாரிங்க கூட இத கண்டுக்கல மக்கள் குற்றச்சாட்டு

பாப்பிரெட்டிப்பட்டி
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர்,  அதிகாரப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட  அம்மன் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சூழ்ந்துள்ளன.

 இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் கூட்டமாக நடுரோட்டில் நின்றதால் அ பள்ளிப்பட்டியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் லதா அவர்கள்  இறங்கி அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
 மக்கள் கூறுகையில் ஒருசில மக்கள் நீரோடை நிலத்தை ஆக்கரமிப்பு செய்ததால் மழை நீர் மற்றும் கழிவுநீர் வயல்வெளிகளிலும் குடியிறுப்புகளிலும் நுழைந்துவிடுகின்றன. 
இதனால் இங்கு ஒரு சில பேருக்கு  உடல் நிலை சரியில்லை.  சுமார் ஒருவருட காலமாகவே வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்ததின் பேரில் உடனடியாக  காவல் ஆய்வாளர் லதா அவர்கள்  அதிகாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், கிராம உதவியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் போன்ற அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பொக்லைன் இயந்திரத்தை வைத்து, கழிவு நீர், மற்றும்,மழைநீர், அருகில் உள்ள பீனியாறுக்கு செல்லும்படி  பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
 பாப்பிரெட்டிபட்டியில் உள்ள அத்தனை அதிகாரிகளும் அதன் வழியாக சென்றாலும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில்  மக்கள் நலன் கருதி இந்த பணியை செய்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா அவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். காவல்துறை தான் வாங்கும் ஊதியத்திற்கு மக்கள் சேவையில் 24 மணி நேரம் செய்கிறது. ஆனால்  அந்தந்த பணிக்கான அதிகாரிகள் என்ன .........?(செய்றா)ங்கனும் ? ஆதங்கத்துடன் மக்கள் கேள்வி எழுப்பினர் 

Comments