அதிகாரபட்டி ஆற்றில் மிதந்த உடல் ஒரு குவாட்டரால் நடந்த கொலையா ?? துறிஞ்சிபட்டி அடுத்த "வடாசந்தையூர் மக்கள் சலசலப்பு"

அதிகாரப்பட்டி புதுப்பாலம் அருகில் பீணியாறு ஆற்றில் மிதந்த உடல்   துரிஞ்சிபட்டி வடசந்தையுர் 1.ரஷித்.( 55 ) s/o சயத்உசேன். உடல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  துறிஞ்சிபட்டியில் 
ரஷித் இவரது கூட்டாளிகளான
 2.இர்ப்பான் 26 s/o பாதுஷா 3.ஆறுமுகம்52 s/o ராஜி ஆகிய மூவரும் 4 குவாட்டர் வாங்கியுள்ளனர். அதில் 3 குவாட்டரை குடித்துவிட்டு ஒரு குவாட்டரை மட்டும் செடி புதர் அருகே மறைத்து வைத்துள்ளனர். இர்பான், ஆறுமுகம் வெளியே சென்று திரும்பி வந்து பார்க்கையில் ஒளித்து வைத்த குவாட்டர் இல்லை என்பதை அறிந்து ரஷித் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சம்பவத்தில் நான்தான் எடுத்தேன் என்று ரஷித் அவர்கள் ஒத்துக்கொள்ள அங்கே கை கலப்பாகி அவரை அடித்து துறிஞ்சிப்பட்டி பகுதியில் இருந்து அதிகாரப்பட்டி பீணியாறு ஆற்றில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல இர்பான், ஆறுமுகம், வளம் வந்துள்ளனர். ரஷித் வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்ப உறவுகள் வாட்ஸ்அப்பில் புகைப்படம் பதிவு செய்து இவரை காணவில்லை என்று பகிர்ந்து வந்துள்ளனர். வடசந்தாயூர்  பகுதியில் ஒரு சில பேர் மூவருக்கும் நடந்த பிரச்சனையை வைத்து ரஷித் குடும்பத்தில் சொன்னவுடன் இல்லை நாங்கள் நன்றாக இருந்தோம் ஆற்றில் மீன் பிடிக்க சென்றோம், அவர் ஆற்றில் வளை போட்டுவிட்டு வருவதாக கூறி அங்கே இருந்தார் என ஒரு கட்டுகாதையை அவிழ்த்துவிட்டுள்ளனர். 
இந்த சம்பவத்தை அடுத்து வடசந்தையூர் மக்கள் சேர்ந்து இர்பான் மற்றும் ஆறுமுகத்தை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

Comments