'"தர்மபுரியில் நடக்கும் ரகசிய விபச்சாரம் " காவல்துறை பாதுகாப்பா ?

தருமபுரி மாவட்டம் இயற்க்கை நிறைந்த தொழில் வளம் கொண்டிருந்தாலும்   லட்சக்கணக்கான மக்கள் வேலையின்றி வாழ்ந்து வருகின்றனர். இதனால் குடும்பநிலை மிகவும் மோசமான சூழலுக்கு போகும் என்பது ஆதிகால குடிமக்களின் கருத்தியல் ஆகும். அப்படி ''வேலையின்றி திண்டாடும் மக்கள்'' பலவருடமாக தருமபுரி மாவட்டத்தில் தொழில் நிறுவனம் கொண்டுவாருங்கள் என்று கூறினாலும் வரும் ஆனா வராது என்ற தோறணையில் ஒவ்வொரு அரசும் செயல்படுவதை நினைத்து தர்மபுரி மக்கள் ஓயாத ஒப்பாரியில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்  ஓயாத வறுமையில் வாழ்ந்து வரும் பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தை கூறி விபாச்சார வலையில் சிக்க வைத்து தற்போது,



தொழிலாகவே நடத்தி வருகின்றனர்.  தர்மபுரி, பென்னாகரம், அரூர் , பாப்பிரெட்டிப்பட்டி  பகுதியில் இயங்கிவரும் விடுதிகளில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக விபச்சாரம் நடந்து வருவதாக தகவல் வந்த அடிப்படியில் பல்வேறு பகுதிகளில் ரகசியமாக விசாரணையை தொடங்கினோம்...பிறகு அது காவல்துறைக்கு தெரிந்தே நடக்கிறது என்பது வெள்ளிச்சத்திற்கு வந்தது.. ஆதாரத்துடன் ஜூனியர் ரிப்போர்ட்டர் இதழில் வருகின்ற 13 ஆம் தேதி பார்க்கலாம்...

Comments