மாணவியை கர்ப்பிணியாக்கிய வழக்கில் தி.மு.க - பிரமுகர் மகன்''போக்சோ'' வில் கைது

திருநெல்வேலியில் தி.மு.க.,வைச்சேர்ந்த ஊராட்சி தலைவரின் மகன், மாணவியை கர்ப்பிணியாக்கிய வழக்கில் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சௌந்திரபாண்டியபுரம் ஊராட்சி தலைவர் முருகேசன். தி.மு.க., பிரமுகர். இவரது மகன் வெங்கடேஷ் 23. 9ம்வகுப்பு வரை படித்துள்ளார். பக்கத்து கிராமத்தைச்சேர்ந்த 15 வயதான பிளஸ் 1 படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார்.

இந்நிலையில் அம்மாணவி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். மாணவி பெற்றோர் புகாரில், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் வெங்கடேைஷ, 'போக்சோ 'சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments