மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின் படி ஏப்ரல் 14-ம் தேதி இன்று புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
பையர்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாவட்ட நலக்குழு உறுப்பினரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான தமிழன். திரு. பி. எஸ். சரவணன் அவர்கள் தலைமையில் சமத்துவ தினமாக கொண்டாடப்பட்டது. இதில் பாபாசாகேப் பாரத்ரத்னா டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்பு சமத்துவ தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.கோ. பிரபாகர் ,பையர்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாகுப்புசாமி அவர்கள், மூத்த ஆசிரியர் திரு. தொப்பையன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அதனை தொடர்ந்து பையர்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள பாபாசாகேப் பாரத்ரத்னா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வெடித்து மிக சிறப்பாக கொண்டாட பட்டது. இதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊர் தலைவர், ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெண்கள் மற்றும் பல்வேறு சமுதாய பெரியவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Comments
Post a Comment