மாஸ் காட்டிய சென்னை போலீஸ் !!! 6 நாட்களில் 30 குற்றவாளிகள் கைது


தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 6 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு கஞ்சா உட்பட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 30 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 33 கிலோ 770 கிராம் கஞ்சா, 1,060 உடல்வலி நிவாரண மாத்ரைகள், 7 செல்போன்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 08.04.2022 முதல் 13.04.2022 வரையிலான 6 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 30 குற்றவாளிகள் கைது. 33 கிலோ 770 கிராம் கஞ்சா, 1.060 உடல்வலி நிவாரண மாத்ரைகள், 7 செல்போன்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்த 11.04.2022 காலை சுமார் 09.15 மணியளவில் புது வண்ணாரப்பேட்டை, அன்னை இந்திரா நகர், இரயில்வே கேட் அருகே கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 நபர்களை விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு உடல்வலி நிவாரண மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 

சட்ட விரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 1.பாண்டுரங்கன், வ/42, த/பெ.மோகன், 6வது பிளாக், முகப்பேர் மேற்கு, சென்னை, 2.கோபிநாத் சிங், வ/40, த/பெ.மகேந்திர சிங், கோளம் மிட்டாய் தெரு, சூலூர்பேட்டை, நெல்லூர், ஆந்திர பிரதேசம், 3.சந்தோஷ்குமார், வ/23, த/பெ.செந்தில்குமார், 5வது பிளாக், கவியரசு கண்ணதாசன் நகர், கொடுங்கையூர், சென்னை, 4.பாலசுப்பிரமணியன், வ/55, த/பெ.சுப்பையா, அகத்தியர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். Tydol 200 மாத்திரைகள், Nitravet 315 மாத்திரைகள், Nitrosun 160 மாத்திரைகள், Spasmo Proxyvon 360 மாத்திரைகள் என மொத்தம் 1,035 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 6 Sterile water bottle, 86 Disposable syringe, 94 Disposable needles, 6 செல்போன்கள் மற்றும் குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  இதே போல, P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்த 1.மணிகண்டன் (எ) கஞ்சா மணி, வ/21, த/பெ.கந்தன், பெரியார் சாலை 11வது தெரு, அன்னை சத்யாநகர், கொடுங்கையூர், இவரது சகோதரர், 2.கணேசன் (எ) பீஸ், வ/19, த/பெ.கந்தன், 3.மோகன்ராஜ் (எ) வண்டு, வ/19, த/பெ.பார்த்தசாரதி, அண்ணாநகர் 3வது தெரு, கொருக்குப்பேட்டை, 4.வினோத் (எ) நைனா , வ/19, த/பெ.சரவணன், எம்.ஜி.ஆர்.நகர் 9வது தெரு, கொடுங்கையூர், 5.மணிகண்டன் (எ) ஆடு மணி, வ/20, த/பெ.முத்துகிருஷ்ணன், பூங்காத்தம்மன் கோயில் தெரு, புளியமரம், திருநின்றவூர் ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.  சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Comments