தர்மபுரி மாவட்டம் கவுண்டம்பட்டி ஊராட்சியில் கோழிப்பண்ணைதான் மிக பிரபலாமாக இருந்தது. அதன் வரிசையில் அப்பகுதியில் உள்ள ஏரி வேலை ( 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் பணியில் உள்ள பெண்கள் ஊரின் தொடக்கத்தில் ஓடும் ஆற்றினை சுத்தம் செய்து அசத்தியுள்ளனர். ) இந்த ஆற்றின் வடவமைப்பு மற்றும் சுத்தமாக ஓடும் நீரோடையை கண்டு
புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர். ச்சே இப்படி நம்ம தர்மபுரியில எல்லா ஆறும் இருந்தா எப்படி இருக்கும்.
"ஊர் செழிக்கும்"
"விவசாயம் செழிக்கும்'
"பூக்கள் பூக்கும்"
"மனங்கள் வீசும்"
"சிட்டுகுருவிகள் பாட்டுப்பாடும்"
"தேனீக்கள் வயலின் வாசிக்கும்''
"மயில்கள் வந்து நடனமாடும்",
"வண்ணத்துப்பூச்சிகள் அழகூட்டும்" அடடா !
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
அல்லவா '
அந்தந்த பகுதியில அதிகாரிகள் சரியா வேல வாங்குனா எல்லாமே செழிக்கும்தானே !
அரசின் நிதியை சரியாக பயன்படுத்தி தனது பணிகளை செய்த பெண்களுக்கு எவிடென்ஸ் பார்வை சார்பில் வாழ்த்துக்கள்
Comments
Post a Comment