பள்ளிக்கூட இரும்பு கம்பங்கள் திருட்டு ! பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உடந்தையா ! மக்கள் கேள்வி ??


சமீபகாலத்திற்கு முன்பு தமிழகத்தில்  பழைய பள்ளிக்கூட கட்டடங்கள் இடிந்து விழுவது அதனால் பாள்ளிமாணவர்களுக்கு உயிர்  சேதம் ஏற்படுவது போன்ற நிலைகள் அதிகமாக இருந்ததால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாணவர்கள், மற்றும் மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி படுத்தும்வகையில்  பழுத்தடைந்த கட்டிடங்கள் இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள் இருப்பின்  அதனை உடனே  இடடித்துவிடும்படி உத்தரவிட்டார்.  



பிறகு பழைய கட்டிடடங்கள் இடிக்க தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். அதன்பேரில்  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை  கட்டி,  கட்டிடங்களை இடிப்பதற்கு மட்டும் ஒப்புதல் வாங்கப்பட்டு பல்வேறு இடங்களில் பணிகள் தொடங்கின. இடிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து விலைமதிக்கத்தக்க , இரும்பு பொருட்கள், கருங்கல், மண், மரப்பலகைகள்  இவை அனைத்தும், எவ்வளவு இருக்கிறதென்று ஆய்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பவேண்டும்.



பிறகு மாவட்ட கல்வித்துறை பொருளை மதிப்பீடு செய்து அதனை பொது ஏலம் விட்டு அரசுக்கோ அல்லது கல்வித்துறைக்கோ வருகின்ற நிதியை வைத்து தேவையான திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இருந்தது. 
ஆனல் அரசு அறிவித்த விதிகளுக்கு எதிராக தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது ஏலம் விடாமலும் மாவட்ட கல்வி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தாமலும், இடிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து வரும் விலை மதிக்கத்தக்க இரும்பு கம்பிகள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அ. பள்ளிப்பட்டி இடிக்கப்பட்ட கட்டிடங்களின் இரும்பு பைப்புகள், கம்பிகள், கருங்கற்கள், மண் இவை அனைத்தும் சேட்டு என்பவர் எடுத்து தனது சொந்த  இடத்தில் கொட்டகை போடுவதற்கு பயன்படுத்தி வருகிறார், என்று பள்ளிப்பட்டு கிராமமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிதேவன் அவர்களிடம் கூறியபோது முன்னுக்கு முரணாக பதிலளித்தார். இதனால் மாவட்ட கல்வி மையத்தை அணுகி நடந்தவையெல்லாம் B 3 பிரிவில் உள்ள திருமதி உமா சங்கர்  அவர்களிடம் கூறியபோது, அவர் அதிர்ந்து போய் இதுபோன்ற தகவல் எங்களுக்கு இன்னும் வரவில்லை, அப்படி ஏலம் விடாமல் இருக்கும் பொருட்களை ஒருவர் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால் அதற்கு உடந்தையாக இருந்து எங்களுக்கு முறையான சரியான தகவல் கொடுக்காமல் இருக்கும்,  கணக்கு காட்டாத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார். இங்குமட்டுமல்ல மெணசி பகுதியிலும் நடந்துள்ளதென்று தகவல் வெளியாகியுள்ளது. இதை கேள்விப்பட்ட பள்ளிப்பட்டி மக்கள் இதுபோன்ற திருடர்கள் இருக்கும் வரை தர்மபுரி மாவட்டம் வளர்வது கேள்விக்குறியாகத்தான் இருக்கும் ஆகவே உடனடியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மீது கடுமையானா நடவடிக்கை  எடுக்க வேண்டுமென பள்ளிப்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Comments