பதவிக்கு வந்தவுடன் தனது பணியில் இறங்கிய பேரூராட்சி வார்டு உறுப்பினர் சங்கீதா மயக்கண்ணன்

சுமார் 10 வருடமாக துய்மையற்று கிடந்த பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெண்கள் பயன்படுத்தும் கழிவறை கட்டிடம் மற்றும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு தீயிட்டுக் கொளுத்தியும் சுகாதார சீர்கேடு ஆக இருந்த நிலையில் மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தனர் என்று கூறப்படுகிறது. 
 தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பத்தாவது வார்டில் வெற்றி பெற்ற சங்கீதா மாயக் கண்ணன் என்பவர் தற்பொழுது பொக்லைன் மூலம் அப்பகுதியை சுத்தம் செய்து மக்கள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார் இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Comments