- Get link
- X
- Other Apps
ஓமலூர் ரயில் தண்டவாளத்தில் பிறந்த குழந்தை கண்டெடுப்பு
பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஓமலூர் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் ரயில் பாதையில் பிறந்து ஒரு சில மணிநேரங்களே ஆன பச்சிளம் குழந்தையின் அளரல் சப்தம் கேட்டதையடுத்து அங்குள்ள மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு வந்து குழந்தையை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.குழந்தைக்கு மருத்துவர் கேலன்குமார் NVSU முறையில் தீவிர சிகிச்சையளித்து குழந்தையின் உயிரைக்காப்பாற்றினார்.மேற்படி சிகிச்சையளிக்க சேலம் அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. பிறந்து ஒரு சில மணி நேரங்களே ஆன குழந்தையை ஆதரவற்ற நிலையில் ரயில் தண்டவாளத்தில் விட்டு சென்றவர்கள் யார் என்பதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment