மாவட்ட ஆட்சியர் அம்மா வர்றாங்க - சீக்கரம் ரோட்டை சரிபண்ணுங்க பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை !



அ பள்ளிப்படியிலிருந்து ஊத்தங்கரை வரை தற்போது நான்கு வழிச்சாலை  சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அ பள்ளிப்பட்டியிலிருந்து சேலம் வரை சாலைகள் எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சேலம் செல்லும் சாலைகள் மிகமோசமாக ஆங்காங்கே  பழுதடைந்த நிலையில் இருந்தது பழுதடைந்த பகுதியை எப்படா சாமி சரிபண்ணுவாங்கணும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்த நிலையில 15-03-2022 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப., அவர்கள்  மாவட்ட வாரியாக அலுவலகங்களுக்கு திடீரென  சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வந்தார். இந்த தகவல் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு தெரிய ஐ ஐயோ ! மாவட்ட ஆட்சியர் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருக்காங்களாம்" உடனே பஞ்சர் ஆனா டியூபுக்கு எப்படி பஞ்சர் போடுவாங்களோ அந்த மாதிரி அங்கங்க கிழிஞ்ச போன ரோட்டுக்கு பஞ்சர் போட்டுட்டு எல்லாத்தையும் நான்கு மணி நேரத்தில சரிபண்ணி  பெருமூச்சி விட்டாங்களாம். இதனால மாவட்ட ஆட்சியரை மக்கள் பாராட்டி இனி அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் வந்தாங்கன்னா  ஊறு சிறப்பா இருக்கும்னு மக்கள் பேசிக்கிட்டு இருக்காங்க., 

Comments