கொண்டலாம்பட்டியில் ஓட்டுனர் தீக்குளித்து உயிரிழப்பு - உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம்




சேலம் கொண்டலாம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் செவ்வாய்க்கிழமை அன்று மதுபோதையில் நான்கு சக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார்.இவரை வாகன சோதனை மேற்கொண்டிருந்த போக்குவரத்து காவல் அதிகாரிகள் விசாரித்து வழக்கு பதிவு செய்துள்ளானர். இதையடுத்து சந்தோஷ்குமார் அருகிலுள்ள பெட்ரோல் வங்கியில் பெட்ரோல் வாங்கி கொண்டலாம்பட்டி ரவுண்டான அருகே உடலில் தீவைத்துக் கொண்டார். காவல் அதிகாரிகள் சந்தோஷ்குமாரை மருத்துவமனையில் சேர்த்தனர்.80% தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சந்தோஷ்குமாரின் உடலை வாங்க மறுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்திற்கான காரணத்தை கேட்ட அதிகாரிகளிடம் உறவினர்கள் கூறியதாவது வாகன சோதனையின்போது போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளரிடம் உறவினர்கள் நாங்கள் அபராதம் செலுத்த தயாராக இருந்ததாகவும் ஆனால் அபராதத்தை அவர் ஏற்காமல் சந்தோஷ்குமாரை உதைத்ததாகவும் தெரிவித்தனர்.இதனால் தற்கொலைக்கு காரணமான சம்பந்தப்பட்ட போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் மீது  நடவடிக்கை எடுக்கும்வரை சந்தோஷ்குமார் உடலை வாங்கமாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
Show quoted text

Comments