போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவு - தேர்தல் புகார்கள் மீது நடவடிக்கை || DGP, order to police - action on election complaints

 


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசாருக்கு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
The DGP, Silenthrababu, has directed the police to take immediate action on complaints of urban local government elections.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில தினங்களில், திருநெல்வேலி, பாளையங்கோட்டையில், தி.மு.க., நிர்வாகி அபே மணி, 32 கொடூரமாக கொல்லப்பட்டார். சென்னை மடிப்பாக்கத்தில், தி.மு.க. வட்டச் செயலர் செல்வம், 45 கொல்லப்பட்டார்.தேர்தல் தொடர்பாக, மாநிலம் முழுதும் அடிதடி, உருட்டு கட்டை தாக்கு என, பல்வேறு சம்பவங்கள் நடந்தன. இது ஓட்டுப்பதிவு நாளிலும் நீடித்தது. கள்ள ஓட்டு போட முயற்சி, ஓட்டுப்பதிவு இயந்திரம் உடைப்பு, எம்.எல்.ஏ., கார் கண்ணாடி உடைப்பு என, வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
Within days of the election date being announced, DMK executive Abe Mani, 32, was brutally murdered in Palayankottai, Tirunelveli. In the Chennai fold, the DMK Circle Secretary Selvam, 45, was killed. It also lasted on recording day. Violent incidents such as attempt to drive illegally, breaking of recording machine, MLA, breaking of car glass.

ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், மாநிலத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இதனால், 'கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், ரோந்து பணியில் தொய்வு கூடாது. விழிப்புடன் பணியாற்ற வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், தேர்தல் தொடர்பான பிரச்னைகள் குறித்த புகார்கள் தாமதமாக விசாரிக்கப்படுகின்றன. பல காவல் நிலையங்களில் புகார்கள் பெறப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
As the vote count takes place today, an extraordinary situation prevails in the state. Thus, 'surveillance work should be intensified and patrol duty should not be compromised. We have to work with vigilance ', the DGP, Silenthrababu has ordered. Accordingly, police security has also been strengthened. However, complaints about election-related issues are being investigated late. It has been alleged that complaints are not received at many police stations.
இதையடுத்து, டி.ஜி.பி., பிறப்பித்துள்ள உத்தரவில், 'தேர்தல் தொடர்பாக தரப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 'தவறினால், பெரிய பிரச்னைகளாக உருவெடுக்கும். தேர்தல் தொடர்பாக மட்டுமல்ல, மக்கள் தெரிவிக்கும் பிரச்னைகளை காது கொடுத்து கேளுங்கள். அதற்கு சட்ட ரீதியாக தீர்வு காணுங்கள்' என, கூறப்பட்டுள்ளது.

Following this, the DGP issued an order directing immediate action on election-related complaints. 'Failure to do so can lead to major problems. Listen not only to the election but also to the issues raised by the people. Find a legal solution to it ', it has been said.

Comments