பாப்பம்பாடியில் - காவல் துறையினர் கொரோனா , மற்றும் ஓமைக்ரான், நோய் தாக்கத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தருமபுரி:-

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி, அரூர் உட்கோட்ட துணை  காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரில்,கோட்டபட்டி காவல் வட்டம்  ஆய்வாளர் அவர்களின் மேற்பார்வையில் அ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு.மனோகரன் அவர்கள் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.பரணி , மாணிக்கவாசகன் ஆகியோர்கள் முன்னிலையில் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர்கள் பாப்பம்பாடி அண்ணாநகர் மலையோர கிராம மக்களுக்கு கொரோனா(ஒமைக்ரான்) வைரஸ் சம்மந்தமாக இலவசமாக முககவசம் வழங்கியும் மற்றும் பொது மக்கள் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் இதனால் கொரோனா(ஒமைக்ரான்) வைரஸ் பரவலை தடுக்கலாம் என்று பொதுமக்களுக்கு எடுத்துரைத்து  மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரப்பட்டது.

Comments