ஏழைங்க மூச்சி திணறி செத்தா அதிகாரிகளுக்கு என்ன கவலை ? தருமபுரி - அரூர் தனியார் ஜல்லி க்ரஷ்ஸர் புகையால் பாதிக்கப்படும் விவசாயிகள் கண்ணீர்

  தருமபுரி - அரூர்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்குவாரிகள் மற்றும் கல் அரவை நிறுவனம் இயங்கி வருகின்றது. இதனால் ஒரு சில பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கும் தனியார் கல் குவாரிகள் மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, விதிகளை மீறி செயல்படும் கல் குவாரி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம்

       

அரூர் ஒன்றியத்தில், மாவேரிப்பட்டி, அருகே கல் அரவை நிறுவனம் இயங்கி வருகிறது .   கோணம்பட்டி, புறாக்கல்உட்டை, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, தீர்த்தமலை, பகுதிவாழ் மக்கள் சாலையோரத்தில் கடந்துசெல்லும்போது அதிகமான புகைமண்டலமும், புழுதி காற்றும் வீசிருகிறது.  இயற்கையான விவசாயம் நிறைந்த சுத்தமான காற்றுள்ள பகுதிகொண்ட  கிராமங்களில் அரசு அனுமதி பெற்ற தனியார் கல் குவாரிகள் மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் ஏராளமாக இயங்குகின்றன. இப்பகுதிகளில் இயங்கும் கல் குவாரிகளில் வெடி வைத்து பாறைகளை உடைத்து, அதை அதே பகுதிகளில் செயல்படும் கல் அரவை தொழிற்சாலைகளில் ஜல்லி கற்களாக்கி, பல பகுதிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

     
கல்குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகளில் விதிமுறை மீறல்கள்

 அனுமதியின்றி அதி சக்தி வாய்ந்த வெடிகள் குவாரிகளில் பயன்படுத்துதல்   சாலையோரங்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு தடுப்பு ஏற்படுத்தாமை விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே தொழிற்சாலைகள் செயல்படுதல் தொழிற்சாலைகளில் கனரக வாகனங்களில் அளவுக்கு அதிமாக கல் ஏற்றுதல் தொழிற்சாலைகளுக்காக நீர் நிலைகள் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலம் ஆக்கிரமித்தல். என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


ஏற்படும் பாதிப்புகள் 


 அதிசக்தி வாய்ந்த வெடியால் குடியிருப்பு வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது   சாலை ஓரங்களில் தடுப்பு ஏற்படுத்தாததால் தொழிற்சாலைகளில் இருந்து புகை வெளியேறி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்  விவசாய நிலம் மற்றும் நீர் நிலைகள், குடியிருப்புகள் அருகே தொழிற்சாலைகள் இயங்குவதால் குடி நீர் மாசடைவது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது   கனரக வாகனங்களில் அளவுக்கு அதிமாக லோடு ஏற்றுவதால், வழியெல்லாம் கற்கள் கொட்டியபடி செல்வதால், கிராமப்புற சாலைகள் சேதமடைகின்றன    குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல வசதியாக ஏரி மற்றும் பாசன கால்வாய்கள் துார்த்து விடுவதால் பயிர்களுக்கான பாசனம் பாதிப்பு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

               
மாவேரிப்பட்டியில்  (சிட்டி புளூமெட்டல்)  இயங்கும் தனியார் கல் குவாரியை சுற்றிலும் பயிர் செய்துள்ளோம். இக்குவாரியில் வெடி வைக்கும் போது விவசாய நிலங்களில் கற்கள் சிதறுவதால், தினம், தினம் உயிருக்கு அஞ்ச வேண்டி உள்ளது. மேலும், ( சிட்டி புளூமெட்டல்) கல் அரவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மற்று கற்களின் பவுடர்கள் பயிர்கள் மீது பரவி விவசாயம் கேள்விக்குறியாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் 

 

 கல் குவாரியை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. மலையை சுற்றிலும் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குகின்றன. இதில், இரவு, பகலாக புகையும், புழுதியும் பறப்பதால் சுவாசிக்கும் காற்று, தண்ணீரில் கலந்து, சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. குவாரிகளில் அதிசக்தி வாய்ந்த வெடிகள் வைக்கப்படுவதால் அதிர்வு ஏற்பட்டு, வீடுகள் ஆட்டம் காண்கின்றன. மூன்றாண்டுகளாக அதிகாரிகளிடத்தில் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

மலைகளில் அரசு அனுமதி அளித்துள்ள அளவை காட்டிலும், கூடுதலான நிலத்தில், பல அடி ஆழத்திற்கு பூமியை தோண்டி, கற் பாறைகள் வெட்டி எடுக்கப்படு கின்றன.  இதற்கு மறைமுகமாக  அரசு அதிகாரிகளும் துணை போகின்றனர். செய்தியாளர்கள் வந்தா அவங்களையும் லோக்கலில் உள்ள ஆட்களை வைத்து மிரட்டி அவர்களையும் ஒரு சில அதிகாரிகளின் துணையோடு  அதிகாரிகளின் செய்தியாளர்களை  தனது கைக்குள் வைத்துள்ளனர். என்று இரண்டுவருடத்திற்கு முன்பு நாங்கள் உணர்ந்துவிட்டோம். 

 

 இதுவரையில் தருமபுரி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்து உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா என்று கேள்வி கேட்டதில்லை ஏழைமக்கள் நோய் வந்து செத்தா பரவால்லனும் அதிகாரிகளும் துணையாதான இருக்காங்க சாமி என்று தனது வயலில் நெல் அறுத்துக்கொண்டே லட்சுமி அம்மா கண்ணீர் வடித்தார், இப்போ சூரியன் ஆட்சி வந்துருக்கில்ல எங்கள் வாழ்நாள் ஆயுளுக்கு  விடியல் கிடைக்கும் என்று எதிர்பாக்குறோம். எனவே, கனிம வளம் சூறையாடப்படுவதை தடுக்கவும் காற்று மாசுபடுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க

                                                  செய்தியாளர்                   எவிடென்ஸ்  பார்வை


Comments