திடக்கழிவு மேலாண்மை திட்டம் பல கோடி பாழாய்ப்போன அவலம் - தர்மபுரி - தமிழ்நாடு

                  தர்மபுரி - தமிழ்நாடு                   



        2016-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டப்படி உணவகங்கள், விடுதிகள், வணிக நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் மற்றும் குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும் சாலையில் குப்பை கொட்டுபவர்கள், தரம் பிரித்து வழங்காதவர்களை சம்பந் தப்பட்ட உள்ளாட்சி தூய்மை காவ லர்கள் கண்காணித்து, அபராதம் விதிப்பார்கள். என்று அதில் அறிவுறுத்தபட்டுள்ளது.


 

தினசரி சேரும் குப்பைகளில், மக்கும் குப்பைகளை பச்சை நிற கூடையிலும், மக்காத குப்பைகளை நீல நிற கூடையிலும் உள்ளாட்சி பணியாளர்களிடம் வழங்க வேண் டும். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும், 2016 திடக்கழிவு மேலாண்மை சட்டம் குறித்தும், திறந்த வெளியில் மலம் கழிக்காதிருத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்தல் உள்ளிட்ட சுகாதாரம் குறித்து அனைத்து விளக்கங்களையும் இவர்கள் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் விளக்குவார்கள். என்று கூறப்பட்டிருந்தது. 



மத்திய அரசு 60 சதவீதம்


இது குறித்து சுகாதார அலுவலர் ஒருவர் கூறும்போது, “2016 திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் பிளாஸ்டிக் மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதி யாக இந்த திட்டத்தை செயல் படுத்த பரப்புரையாளர்கள் நியமிக் கப்பட்டது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்கு கிறது. பரப்புரையாளர்கள், 12ம் வகுப்பும், மேற்பார்வையாளர்கள் இளங்கலை படிப்பில் சோசியாலஜி பிரிவு படித்திருக்க வேண்டும். இதன் மூலம், 1,074 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்கள் . ஆனால் இப்போது இது முழுமையாக நடைமுறையில் உள்ளதா என்பது கேள்வி குறியாக உள்ளது.



                                               தருமபுரி மாவட்டத்தில் 

பல்வேறு இடங்களில்  செய்தி சேகரிக்க சென்ற பகுதிகளில் சாலையோரங்களிலும்,  ஆற்றுப்பகுதிகளிலும் குப்பைகளை கொட்டியும்
தீயிட்டு கொழுத்தி  வருகின்றனர். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் மண்புழு உரம்,இயற்கை உரம் தயாரித்து அதனை இயற்கை விவசாயிகளிடம் விற்று பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு அதிக வருமானத்தை  பெறலாம் என்ற நோக்கிலும் அதிக லாபம் தரும் தரும் தூய்மை பணியாளர்களுக்கும் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும் அரசு மூலமாக பரிசுகள் கொடுத்து இந்த திட்டத்தை மென்மேலும் வளர்ச்சியடைய ஊக்கப்படுத்தவேண்டும் என்று செயல்முறையில் கொண்டு வந்தனர்.

 


இதுவரையில் இயற்க்கை உரம் மண்புழு உரம் தயாரித்து எத்தனை விவசாயிகளிடம் விற்று லாபம் எடுத்தனர் என்பது இதுவரை தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது  இந்த திட்டம் தருமபுரி மாவட்டத்தில் பாழாய்ப்போன நிலையில் உள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு வட்டாரவளர்ச்சி அலுவலரும் என்னென்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று பார்த்தால் எல்லாம் கேள்வி குறியாக உள்ளது என சமூக ஆர்வலர்களும் பல்வேறு கட்சி பிரமுகர்களும் புலம்பி வருகின்றனர். 

 


சென்ற ஆட்சியில் இந்த திட்டத்தை பற்றி கண்டுகொள்ளாமல் பஞ்சாயத்து தலைவர்களிடமும் ஊராட்சி செயல் அலுவலரிடமும்  நல்ல கமிஷன் வரும் என்று பல  அதிகாரிகள் இதை  கண்டுகொள்ளாமல் தன்னுடைய  லாப நோக்கத்திற்காக மட்டுமே செயல்பட்டு பின்னர் அதை கிடப்பில் போட்டுள்ளனர். என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். 

ஒரு சில இடங்களில் செய்தியாளர்கள் புகார் அளித்தால் மட்டுமே அதை நேரில் வந்து விசாரிக்கின்றனர். ஏன் இதற்கு முன்பு களத்தில் இறங்கி அதிகாரிகள்  விசாரிக்கவில்லை யோசித்தால் சென்ற ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் ஆதரவாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது, என திமுக பிரமுகர் குற்றம் சாடுகிறார் தருமபுரி மாவட்டம் முக்குவதும் 11 கோடிக்கு மேலாக இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்க கூடும் இது எல்லாம் யாருடைய பணம் இந்த திட்டத்திற்கு முதலீடு செய்த பணம் மாநில அரசுக்கோ மக்களுக்கோ திரும்ப கிடைத்துவிட்டதா என்றால் அதில் சந்தேகத்தை எழுப்புகிறது.


தற்போது வந்திருக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்தை பற்றி கண்காணிக்க  தனிக்குழு அமைத்து குறிப்பாக ரகசிய ஆய்வு குழுக்களை அமைத்து இந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தாத பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மீதும் இதனை கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீதும் அபராதம் விதித்து தமிழகத்திற்கு வருவாயை ஈட்டவேண்டும், மக்கள் தவறு செய்தால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது, இப்போ அரசு கொண்டு வந்த திட்டத்தை பராமரிக்காமல் மெத்தன போக்கில் இருக்கும் அரசு  அதிகாரிகள் மீது அபராதம் விதித்தால் என்ன தப்பு. ?

Comments