உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் பரவல் அதிகமாக பரவி வருகிறது என்று மருத்துவர் குழு சொல்லி வருகின்றனர்.
இதனால் இந்தியாவில் முன் எச்சிரிக்கை காரணமாக விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை கண்ட நம்ப ஊரு விஞ்ஞானி ஆ ஆ இதெல்லாம் என்னால நம்ப முடியாது. எத்தன நாளுதான் இதே கதையை விடுவீங்க எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும் சாமி என்ற வசனம்போல , தமிழ் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கராத்தே கண்ணதாசன் என்பவர் எனக்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவால்ல அதனால ஓமைக்ரானையும், கொரோனாவையும், இந்தியா, மற்றும் தமிழகத்தில் இருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் 10 கோடி பரிசு என தனது வாட்ஸ்அப் நம்பரோடு சுவர் விளம்பரம் செய்துள்ளார். இதனால் மருத்துவர்களிடம், மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சி நிறைந்த சிரிப்பலையான சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த சுவர் விளம்பரம் போஸ்டர் எந்த ஊரு எந்த இடத்தில் ஒட்டப்பட்டுள்ளது. என குறிப்பிடவில்லை.
Comments
Post a Comment