பச்சைக்கொடி காட்டிய முதல்வர் குஷியில் பழனியப்பன்
வன்னியர் சமூகத்தைச் சார்ந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஏ.வா. வேலு ஆசி பெற்ற தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் , MP. மணி வீட்டு திருமணம் சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய,ஆறு வகையான .திருமண அட்டைகள் அச்சிடப்பட்டதாகவும், அதில் ஒன்றில் மட்டும் திருமாவளவன் பெயரை குறிப்பிட்டு இருந்ததாக ஏக கோபத்தில் வி.சி.கவினர் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவுண்டர் சமூகம் திமுகவின் ஜாம்பவானாக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான பழனியப்பன் இல்ல திருமண விழாவும் நடைபெற்றது சுமார் மாநாடு போல பந்தல்கள் அமைக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு ஒரு லட்சம் பேருக்கு மேலாக உணவும் ஏகபோகமாக தொகுதி மக்களுக்கு கவனிக்கப்பட்டது,மாவட்டம் முழுவதும் இருந்து கவுண்டர் சமூகத்தை சார்ந்தவர்கள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து மூலமாக திருமணத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்இந்தத் திருமணம் கவுண்டர் சமூகத்தின் பலத்தை காட்டும் வகையில் இருந்தது
இந்து திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு பழனியப்பன் அப்படி என்ன மாய? மந்திரம் செய்தார் என்று ? தெரியவில்லை
ஒரிசாவில் இருந்து விமானம் பிடித்து பெங்களூர் வந்து அங்கிருந்து கார் மூலமாக தனி அக்கறை எடுத்துக்கொண்டு பழனியப்பன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார் அப்போது பழனியப்பனை எவ்வளவு உயர்த்திப் பிடிக்க முடியுமோ? அந்த அளவிற்கு உயர்த்திப் பேசினார்
ஒரு படி மேலே சென்று கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் தனது சமூக பற்றை வெளிக்காட்டி, எங்கள் பழனியப்பனுக்கு சீட்டு வழங்கிய ஆக வேண்டும் என்ற தோரணியில் மிகவும் நாசுக்காக பேசினார்
அப்போதுநான் மட்டும் என்ன இளிச்சவாயனா என்ற பாணியில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மத்திய குழு உறுப்பினர் முத்தரசன் பழனியப்பனை தொகுதி மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் எனபுகழ்ந்து தள்ளினார்
இப்படி ஆளாளுக்கு புகழ்ந்து பேசியதை பார்த்து எதிர் அணியினரான அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் .எம் .பி மணி வாயடைத்துப் போயினர்
இவற்றையெல்லாம் கேட்டுகொண்டிருந்த முதலமைச்சர் அவரும் தனது பேச்சின் போது
மலரும் நினைவுகளோடு
பழனியப்பன் உயர்கல்வி அமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்ததாகவும்
எதிர்க்கட்சியான திமுக கோரிக்கைகள் வைக்கும் போதெல்லாம் அதிமுக அமைச்சர்கள் நக்கலாகவும், நையாண்டியாகவும், நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்
அந்த அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் மிகவும் கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் நடந்து கொண்டதாக பழனியப்பனை குறிப்பிட்டார்.
இப்போது பழனியப்பன் கூச்சத்தோடு மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார் மேலும் பேசிய முதலமைச்சர்.
பழனியப்பன் சட்டமன்றத்தில் பதிலளிக்கும் போதெல்லாம், திமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தாம் அவைக்குள் வரச் சொல்லி பழனியப்பன் சரியான பதிலை தருவார் எனக் கூறியதாக மிகவும் பாராட்டி பேசினார்.
பழனியப்பன் கட்சிக்கு வந்தபோதுதான் மிகவும் மகிழ்ந்ததாகவும், மாவட்டத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த பேச்சின் போது
அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் நாடாளுமன்ற உறுப்பினர் மணி ஆகியோர் மிகவும் ஆச்சரியத்தோடும்,விரக்தியோடும் இருந்ததை பார்க்க முடிந்தது
தர்மபுரி மாவட்டத்தில் பழனியப்பனுக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி கொடுக்காமல் எப்படியும் வேறு இடத்திற்கு விரட்டி விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வன்னியர் சமூக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த வேளையில்
பக்காவாக ஸ்கெட்ச் போட்டுதொகுதியை தட்டி தூக்கி உள்ளார்என்று சொல்லலாம்? முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பனை
முதலமைச்சர் தன்னை இவ்வளவு உயர்த்தி பேசியது மகனின் திருமண நிகழ்ச்சியில் மகிழ்ந்ததை விட தனது சீட்டு உறுதியாகிவிட்டது என்ற மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போய் உள்ளார்....
............. பேட்ரிக்✒️✒️✒️

Comments
Post a Comment