தர்மபுரியில் நலன் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சியில் ரத்ததானம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி பெண்...! மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் மருத்துவர்கள் நேரில் பாராட்டு
தர்மபுரியில் நலன் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சியில் ரத்ததானம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி பெண்...! மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் மருத்துவர்கள் நேரில் பாராட்டு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிப்பட்டியில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர்வு சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அரசு மருத்துவத்துறையை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு மாற்றுத் திறனாளி பெண் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கி பொதுமக்களுக்கு இதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இந்தப் பெண் பி பள்ளிபட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ரத்ததானம் வழங்குவது குறித்து தெரிவிக்கையில் தான் ஒரு விபத்தின் போது சிக்கி ரத்த உதவி கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டதாகவும் அந்த நேரத்தில் உயிரைக் காக்க ரத்த தானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மரணப் பிடியில் இருக்கும் போது தெரிந்து கொண்டேன் அப்போதே நான் முடிவெடுத்தேன், தான் உடல் நலத்தோடு இருக்கும்போது ரத்ததானம் செய்து பல உயிர்களை காப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும் என முடிவெடுத்ததின் பேரில் தற்போது தான் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ரத்த தான முகாமில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியதாக உருக்கமாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் ரத்ததானம் வழங்கிய மாற்றுத்திறனாளியை வெகுவாக பாராட்டி இவர் மூலமாக இந்த சமூகம் ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொண்டு அனைவரும் ரத்ததானம் வழங்குவதற்கு முன்வர வேண்டும் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றது
Comments
Post a Comment