புதிதாக உருவாக்கப்பட்ட #அரூர் நகராட்சியின் முதல் ஆணையாளராக பி.சி. ஹேமலதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.#harurrevidenceparvai
புதிதாக உருவாக்கப்பட்ட அரூர் நகராட்சியின் முதல் ஆணையாளராக பி.சி. ஹேமலதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்திருந்தார்.
கடந்த மாதம் தொட்டம்பட்டி, சங்கிலிவாடி, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டு, அரூர் நகராட்சி உருவாக்கப்பட்டது.
பி.சி. ஹேமலதா இதற்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் முதல் ஆணையாளராக பணியாற்றியவர்.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவருக்கு நகராட்சி ஊழியர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
அவர் தெரிவித்ததாவது, அரூர் நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்றி, தூய்மையாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மழைக்காலம் தொடங்குவதால் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து வடிகால் அமைப்புகள் செய்யப்பட்டு, மழைநீர் வெளியேறுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Comments
Post a Comment