கும்பகோணம் அருகே இரண்டு கேனில் பெட்ரோலை எடுத்து கொண்டு தீ குளிக்க சென்றாரா இளைஞர்..!! வேடிக்கை பார்த்த காவலர்...@evidenceparvaiகும்பகோணம்
கும்பகோணம் அருகே இரண்டு கேனில் பெட்ரோலை எடுத்து கொண்டு தீ குளிக்க சென்றாரா இளைஞர்..!! வேடிக்கை பார்த்த காவலர்...
தமிழகத்தில் அவ்வப்பொழுது நடக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பெட்ரோல் விற்பனை செய்யும் பங்குகளுக்கு காவல்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வழங்கி உள்ளது, தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு Empty பாட்டில் கேன்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என 2022 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை இயக்குனரால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதோடு காலி கேன்களில் பெட்ரோல் வழங்க பங்கு உரிமையாளர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இதை தமிழகத்தில் அனைத்து மாவட்ட காவல்துறையும் விதிகளை பின்பற்றியும் பெட்ரோல் பங்குகளுக்கு குறிப்பானை வழங்கி உத்தரவு பிறப்பித்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக இன்று 8-10-2025 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் கும்பகோணம் மொட்டை கோபுரம் எதிரே உள்ள இந்தியன் பெட்ரோல் பங்கில் பத்து லிட்டருக்கு மேல் பெரிய ரக கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்த நிகழ்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்வதற்காக எடுத்து செல்கிறாரா இல்லை வேறு ஏதாவது பிரச்சனைக்காக எடுத்து செல்கிறாரா இல்லை வியாபாரத்திற்கு எடுத்து செல்கிறாரா இல்லை தங்களுடைய வாகனத்திற்கு எடுத்து செல்கிறாரா, என்ற கோணத்தில் சந்தேகம் உள்ளது. இப்படி மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் இது போன்று வெளிப்படையாக கேனில் எடுத்து சென்றால் அது சக மனிதர்களுக்கு என்ன தோன்றும் ஏற்கனவே வாட்டர் கேனில் பெட்ரோலை வாங்கிக்கொண்டு தவறான சில விசக்கிருமிகள் பெரும் தவறுகள் செய்ததால் பலபேர் அவசர சூழ்நிலைக்கு பெட்ரோல் இல்லாமல் தவிக்கும் நிலையும் உள்ளது. அது காவல்துறை நண்பர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்தது. திடீரென்று அந்த இடத்தில் தீ பற்றி இருந்தால் என்னவாயிருக்கும் என்பதை யோசித்து பார்க்கவேண்டும் அதற்காக அந்த தம்பியையும் தவறு சொல்லும் நிலையில் இல்லை ஆனால் இது பேராபத்து என்பதை நாம் உணரவேண்டும். இப்போது இந்த இளைஞர் இப்படி எடுத்து போக அருகில் உள்ள காவலர் விசாரிக்காமல் இருப்பது பெரிய வருத்தமாக இருக்கிறது. இது போன்று செயலுக்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செய்தியாளர் அ, மகேஷ்
Comments
Post a Comment