இனி பொம்பிடியில் ரயில் நிற்காதா..? எதற்காக மனு கொடுத்தார்கள் ரயில் பயணிகள் சங்கங்கள் @evidenceparvai #evidencebreakingnews #evidenceparvairailway #bommidirailwaystation

பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் கோரி மனு

சேலம் : பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் இன்று சேலம் இரயில்வே கோட்ட அலுவலகத்தில் கோட்ட இயக்க மேலாளர் திரு. சபரீஸ்குமார் மற்றும் கோட்ட துணை மேலாளர் திரு. சரவணன் ஆகியோரை சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து, பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்க கோரி மனு அளித்தனர்.
இந்த மனுவை சங்க செயலாளர் பா. ஜெபசிங் தலைமையில், துணைத் தலைவர் திருமதி சங்கீதாஸ்ரீ, துணைச் செயலாளர்கள் திரு. இளங்கோவன் மற்றும் திரு. வெங்கடேசன், மூத்த உறுப்பினர் ரஃபீக் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

பொம்மிடி நிலையத்தில் நிறுத்தம் கோரப்பட்டுள்ள ரயில்கள்:

கோவை எக்ஸ்பிரஸ் (12675/12676)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12695/12696) அல்லது (12623/12624)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16339/16340)

பெங்களூரு நோக்கி செல்லும் (16315/16316) அல்லது (16525/16526) ரயில்கள்

விவேக் எக்ஸ்பிரஸ் (22503/22504)

அரக்கோணம் மெமோவிற்கு டேனிஷ் பேட்டையில் நிறுத்தம் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இம்மனுவை அதிகாரிகள் நேரில் பெற்றுக் கொண்டு, உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Comments