முதல்வர் ஸ்டாலின் அவர்களே அனுமதி இல்லாமல் தருமபுரி திமுக எம் பி சிப்காட்டில் மண் எடுத்தால் சரி மக்கள் ரோடு கேட்டா தப்பா... நல்லா இருக்கு திமுக நியாயம்..!! உங்கள் நம்பி ஓட்டு போட்மே அதுக்கான தண்டனை இது

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி என்பவரின் மகன் திருமணம் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி அன்று நடைபெற உள்ளது. இவருடைய இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியமான விஐபிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திருமணம் நடைபெற உள்ள ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆடம்பரமாக நடைபெற உள்ள மண்டபத்தின் ஒரு பகுதியாக உள்ள கார் பார்க்கிங்கிற்கு முதல் கட்டமாக கிராவல் மண்ணை கொட்டி சமன்படுத்தும் பணியில் ஈடுபடுவதாக வந்திருக்கக்கூடிய தகவலால் மிகுந்த அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறது. 
குறிப்பாக வி ஐ பி அவர்களுடைய கார்களும் அவர்கள் வந்து செல்லக்கூடிய வாகனங்கள் நிறுத்துவதற்கு தர்மபுரி சிப்காட்டிற்கு ஒதுக்கப்பட்ட அதகபாடி அருகே உள்ள கூத்தப்பட்டி பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்கள், பத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை வைத்து தினசரி நூற்றுக்கணக்கான லோடுகளை ஏற்றிச்சென்று இந்த திருமண நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கு கொட்டப்படுகிறது. சட்டத்துக்கு புறமான இந்த செயலில் ஈடுபட்டுள்ள தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணியின் அதிகார துஷ்பிரயோகம் தலை தூக்கி நிற்கிறது என்பதை இந்த செயல் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அதுமட்டுமின்றி இவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்றதில் இருந்து இது போன்ற பல்வேறு செயல்களில் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை வசை பாடுவதாகவும், திமுக மாவட்ட செயலாளர் என்ற பொறுப்பையும் பெற்றுக் கொண்டு அதிகாரிகளை ஆட்டிப்படைக்கும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கூடுதல் பொறுப்பாக மாவட்ட செயலாளராகவும் இருப்பது தான் தர்மபுரி மாவட்ட மக்களின் குமுறல்கள் ஆக உள்ளது. 

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இவரின் பொறுப்பை வைத்து இவருடைய ஆட்டம் தலை தூக்கி நிற்கிறது. தற்போது மாவட்ட செயலாளர் என்ற பொறுப்பு இதற்கு மேல் வேற என்ன வேணும் என தர்மபுரி மக்களின் மனதில் தோன்றுகின்றன. 

எது என்னவோ, இவருடைய இல்லத் திருமண விழாவிற்கு சிப்காட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து மண்ணைக் கொண்டு வந்து கொட்டுவதை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி வருவாய்த் துறையினரின் அனுமதி இன்றி மண்ணை எடுத்துச் செல்வது திருட்டு மண் ஓட்டுவது போல் உள்ளது. தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என தமிழக முதல்வர் தெரிவிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இவர் தலை நிமிர்ந்து நடந்து அதிகாரிகளுக்கு முக்காடு போட்டுவிட்டு மண்ணை எடுத்து சென்று தன்னுடைய இல்லத் திருமண விழாவிற்கு பயன்படுத்தி வருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Comments