கும்பகோணம் நீதிமன்றம் அருகே உள்ள மின்கம்பம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு, #evidenceparvai Reporter Magesh

கும்பகோணம் நீதிமன்றம் அருகே உள்ள மின்கம்பம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு,

கும்பகோணம்: ஆகஸ்ட் 3-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றம் சாலையில், நீதிமன்ற நுழைவாயில் முன்பு உள்ள மின்கம்பம் திடீரென இன்று (ஆகஸ்ட் 3ஆம்தேதி) காலை தீப்பிடித்து எரிந்தது, அதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அலறியடித்து ஓட்டம்,

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், மேலும், தகவலர் அறிந்து கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது,
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர், காற்றின் வேகத்தால் இரண்டு மின் கயிறுகளும் உரசிக் கொண்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்,

 தீ விபத்து நடந்த மின்கம்பம் அருகே அடுத்தடுத்து மூன்று மின்கம்பங்கள் இருந்த நிலையில் தீ மேலும் பரவாமல் தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர், 

 எப்போதும் பரபரப்பாக காணப்படும் நீதிமன்ற சாலை காலை நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர், இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. 


செய்தியாளர் அ, மகேஷ்

Comments