தருமபுரிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை சூரிய கதிர்களாய் மாறும் பாமக கிளைகள் - தவெக தொண்டர்கள் #தருமபுரி #பாமக #திமுக #தவெக
தருமபுரிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை சூரிய கதிர்களாய் மாறும் பாமக கிளைகள் - தவெக தொண்டர்கள் #தருமபுரி #பாமக #திமுக #தவெக
கட்சி தாவல்
கலக்கத்தில் பாமகவினர்
2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக கையில் எடுக்க துவங்கியுள்ளனர்
ஒரு கட்சி மற்ற கட்சி மீது கடுமையான விமர்சனங்களை வீசத் துவங்கியுள்ளனர்
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தங்களது சுற்றுப்பயணத்தை தீவிர படுத்த தொடங்கியுள்ளனர்
இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரமாகவே மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
வருகின்ற 17ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாட்டு நலத் திட்டங்களையும், புதிய திட்டங்களையும் அறிவிக்கிறார்
அதற்காக மாவட்ட நிர்வாகமும், முதல்வரை வரவேற்க திமுகவினரும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்
தேர்தல் களம் சூடு பிடிக்க வேண்டும் என்பதற்காக மாற்று கட்சியை சார்ந்தவர்களை திமுகவிற்கு அழைத்து வரும் சம்பவங்களும் தினமும் அறங்கேறி வருகின்றது
அதன்படி பாமகவில் சில மாதங்களாக தந்தை, மகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கட்சித் தொண்டர்களிடையே பெரிய குழப்பம் நீடித்து வருகிறது, குறிப்பாகபாமகவின் கோட்டையாக கருதப்படும் தர்மபுரியில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது
தர்மபுரி மாவட்டத்தில் பாமகவின் மூத்த தலைவரான ஜி .கே . மணி பென்னாகரம் சட்டமன்றத் உறுப்பினராக இருந்து வருகிறார் இவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
அதேபோல தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தீவிர அன்புமணிஆதரவாளராக இருந்து வருகிறார். அதனால் தர்மபுரி மாவட்டத்தில் இரு வேறு அணிகளாக பாமகவினர் செயல்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி பொது நிகழ்ச்சி ஒன்றில் பாமகவில் குழப்பம் நீடிப்பதற்கும், கட்சியில் பிளவு ஏற்படுவதற்கும் முக்கியமான காரணமாக பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மூத்த தலைவர் ஜிகே மணி தான் அனைத்திற்கும் காரணம் என்றது போல கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்
இது போன்ற குழப்பங்கள் தர்மபுரி பாட்டாளி மக்கள் கட்சியில் சில மாதங்களாகவே இருந்து வருகிறது இதனால் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் , கட்சி பொறுப்பாளர்கள், மூத்த கட்சியினரிடையே பெரும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது
இந்த சூழலை பயன்படுத்தி தமிழக முதல்வர் வருகையின் போது பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள மூத்த அரசியல் கட்சியினரை திமுக விற்கு அழைத்துச் செல்வதில் தர்மபுரி திமுகவினர் முனைப்பு காட்டி வருகின்றனர்,கட்சியில் பொறுப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தியாளர்கள் மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் போன்றவர்களை தர்மபுரிதிமுக குறி வைக்க தொடங்கியுள்ளது
இந்த அரசியல் காய் நகர்த்தலை தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர், கை தேர்ந்த அரசியல்வாதியும், அரசியல் சாணக்கியனாக செயல்படும் முன்னாள் அமைச்சரான பி. பழனியப்பன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, இன்ப சேகரன் மற்றும் பாமகவில் இருந்து திமுகவிற்கு வந்து மாநில வர்த்தக அணியில் பொறுப்பாளராக இருக்கும் சத்தியமூர்த்தி போன்றவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களையும் முக்கிய பொறுப்பாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வருவதற்கு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்
எனவே திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. க .ஸ்டாலின் தர்மபுரி வருகை யின் போது தர்மபுரி மாவட்டத்தில் பாமகவினர் பலர் முக்கிய தலைவர்களும், ஆயிரக்கணக்கான பாமகவினரும், திமுகவில் ஐக்கியமாவார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சமீபத்தில் நடந்த கவின் ஆணவ கொலையை கண்டித்து இதுவரையில் கண்டனம் தெரிவிக்காமல் இருக்கும் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் மவுனத்தை கண்டு சாதி மறுப்பாளர்களும், தவெக கட்சியில் உள்ள ஆதி திராவிடர் சமூகமும், பட்டியிலின சமூகத்தை சேர்ந்த இளைஞர்களும் பெரும் அதிர்ச்சியை அடைந்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன பின்னரும் விஜய் அமைதியாக இருந்தது மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காகத்தான் ஒரு வேளை ஆனவக்கொலைக்கு எதிராக பேசியிருந்தால் கவினை கொலை செய்த சுர்ஜித்தின் சமூகம் மாநாட்டை நடத்த விடாமல் செய்யலாம் என்பதற்காக ஒரு சுயநல ராரசியல்வாதியாக இருக்கும் விஜையின் முழு அரசியல் நடிப்பையும் இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டனர்.
மேலும் தருமபுரி அரூர் தொகுதிக்கு வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வருகை தந்தாதல் தருமபுரியில் ஒரு அரசியல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமாவின் மேடை பேச்சால் தவெக
உள்ள ஒரு சில சமூக இளைஞர்கள் விஜய் ஒரு சுயநல அரசியல்வாதி என்றும் மீண்டு தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் வருகையின் போது திருமா அவர்கள் வந்தால் ஒரு அரசியல் எழுச்சி பிறக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
Comments
Post a Comment